உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் - 24

‘பகல்வழியளவுங்' காணப்படுதல் வேண்டும், ஆனாலஃது அவர்பாற் காணப்படாமை யானும் என்பது. பண்டைச் சாலடியர்பாற் ‘பகல்வழியளவு' ஒன்றுமே காணப்படுத லானும், இருக்குவேத காலத்து வடவர்பால் 'மதிவழியளவு' ஒன்றுமே காணப்படுதலானும், மற்றுப் பண்டைத் தமிழர்பாலோ அவ் ருவேறளவும் ஒருங்கே காணப் படுதலானும், சாலடியாரும் வடவருந் தாமாகவோ அன்றித் தமிழரிடமிருந்தோ அவ்விரண்டில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுதற்கு முன்னமே தமிழ்ச்சான்றோர் தாமாகவே அவ் வி ருவகையளவும் ஒருங்குணர்ந்திருந்தமை தேற்றமாம்.

அற்றன்று, சாலடியரிடமிருந்து ‘பகல்வழியளவும் வடவரிடமிருந்து 'மதிவழியளவுந் தெரிந்து கொண்டமை யினாற்றான், தமிழர்பால் அவ்விரண்டும் ஒருங்கு காணப்படுவ வாயினவென் றுரையாமோ வெனின், உரையாம். தமிழரின் வானூலுணர்ச்சியை நடுவுநிலை வழாது ஆராய்ந்தறிந்த மக்லீன் என்னும் மேனாட்டாசிரியர்,

“தென்னாட்டின்கண் உள்ள பரதவர் தமது தொழிலின் பொருட்டு வளர்பிறை தேய்பிறை இயக்கங்களைத் தெரிய வேண்டினமையிற், பண்டை நாளிலேயே காலத்தை 'மதிவழியளக்குங்’ கணக்கை உண்டாக்கினர். வெளிநிலங்களி லிருந்த உழவர்களோ பருவ காலங்களையும் பகலவ னியக்கங்களையும் உற்று நோக்குவாராயினர். பார்ப்பனரது தொடர்பினாற் பற்றப்படுதற்கு முன்னமே, தமிழர்கள் தமது நாள்வாழ்க்கைக்கு வேண்டிய வளவு வானூற் பயிற்சியை மிகவுஞ் சிறந்ததாகச் சீர்ப்படுத்தி வைத்திருந்தனர்; அவர்களது முறை பலவாற்றானும் இன்றும் நிலைபேறுற்று நிலவுகின்றது. தமிழரது காலக்கணக்கை ஒழுங்குறுத்துவ தாகிய வியாழ மண்டிலச்சுழற்சி ஐந்துகொண்ட அறுபதாண்டு வட்டம் ஆரியரது முறையிற் சேர்ந்ததன்று. தமிழரின் மனை வாழ்க்கை நிகழ்ச்சிகளின் பொருட்டு வழங்கும் பன்னிரண் டாட்டைக் காலஅளவும் அங்ஙனமே தமிழர்க்கு மட்டும் உரித்தாவது என்று கூறுதலும்”26 ஸ்லேட்டர் என்னும் ஆசிரியர்,

66

“தமிழ்க் காலக் குறிப்புகள் நமதாராய்ச்சி யுணர்வினைப் பெரிதும் எழுப்பி விடுகின்றன. குருக்கள்மார்க்கு உரியதுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/159&oldid=1590783" இலிருந்து மீள்விக்கப்பட்டது