உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

151

ஏனை

குடிமக்கட் குரியதுமெனக் காலக்குறிப்பு இரு திறப்படுகின்றது. குருக்கள்மார்க்குரிய குறிப்பு, தெலுங்குக் குறிப்பு உட்பட ஆசியாநாட்டுக் குறிப்புகளோடொப்ப "மதிவழியளவின்' பாற் படுவதாகலின், அதனைச் சிறந்தெடுத்துப் பேசல்வேண்டா. ஆனாற், குடிமக்கட்குரிய காலக்குறிப்போ 'பகல்வழியள' வின்பாற் படுவது, உண்மை யாகவே முற்றும் ‘பகல்வழியள' வின்பாற் படுவதாகும்; முதலில் 'மதிவழியள' வாயிருந்து பின்பு பகல்வழி யாண்டிற்கு இசையத் திரிபு செய்யப்பட்ட நமது காலக்குறிப்பை ஒப்பதன்று. ஒருதிங்களுக்கு இத்தனை நாட்கள் தாம் இருத்தல் வேண்டுமென்று அவாவாத அவ்வளவுக்கு அது தனிப்‘பகல்வழியள'வின்பாற் பட்டதாயிருக்கின்றது.பகலவன்

செல்லும் வான்வழியானது பன்னிரண்டு கூறுகளாகப் பகுக்கப்படுகின்றது; காலையிலோ நண்பகலிலோ இரவிலோ எந்த நேரத்திற் பகலவன் ஒரு புதுவீட்டிற் செல்கின்றனனோ அந்த நேரத்திலேயே ஒரு புதுத்திங்கள் பிறக்கின்றது.நாட்களின் பிறப்பானது கதிரவன் எழும் பொழுதிலேயே துவங்குகின்றது; அங்ஙனந் துவங்குவது, இந்தியாவிலுள்ள ஏதேனும் ஓரிடத்திற் றோன்றுங் கதிரவன் எழுச்சியைப் பற்றிய அவ்விடத்து நேரத்தைக் கொண்டன்று; மற்று, அது, பழைய தமிழர்கள் கோள்களின் இயக்கங்களை உற்றுநோக்குதற்கு அமைத்த கொடுமுடிகளுள்ள இடத்தின் நேர் உச்சியிலும், நடுக்கோட்டின் (Equator) பாற்படும் இடத்திலும் பகலவன் எழும்போது கணக்குச் செய்யப்பட்ட நேரத்தைக்கொண்டு துவங்குவதாகும். இத்தகையதொரு இவர்கள் எக்காலத்திற் கைக் கொண்டார்களென்பதை எவரேனும் என்றாயினும் எடுத்துக் காட்டினரோ இல்லையோ யான் அறியேன். இது தனித்த இயல்பிற் றென்பதும், வழக்கமான வசதிக்குச் சிறிதுஇடர் பயப்பதாயினுங் கோள்கள் நாள்களின் யக்கங்களை முன்பின் முரணாமல் திருத்தமாக அளந் தறிவதில், இப்போது வழங்கும் வேறெந்தக் காலக் குறிப்பைக் காட்டிலும், இதுவே முன்நிற்ப தென்பதும் பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாலனவாகும். இது தமிழரல்லாதாரின் தொடர்பு சிறிதும் அணுகப்பெறாத தென்னாட்டின்கண் தனியே இடையறாது நடைபெற்று வந்த தமிழ்மக்களின் கலைநூற் புலமையின் சுருசுருப்பினை மெய்ப்பிக்கின்ற தன்றோ?”27 என்று

L

தனிக் காலக்குறிப்பினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/160&oldid=1590784" இலிருந்து மீள்விக்கப்பட்டது