உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் - 24

கூறுதலுங் கொண்டு, சாலடியர்க்குத் தெரியாத ‘மதிவழியள’ வினையும், ஆரியர்க்குத் தெரியாத ‘பகல்வழியள’வினையும், பண்டைத் தமிழ்மக்கள் தாமாகவே நன்கறிந் திருந்தமை தெளியக் கிடக்கின்றதன்றோ?

தமிழ் நாட்டின்கண் வழங்கும் அறுபது ஆண்டுகளுக்குத் தமிழ்மக்கள் வடமொழிப் பெயர்களைப் புனைந்திருப்பினும், வியாழமண்டிலச் சுழற்சியை ஆராய்ந்து கண்டு அவ்வாற்றால் அவ்வறுபதாண்டுகளை வகுத்தமுறை தமிழ்மக்கட்கே உரித்தாதல், மேற்காட்டிய ஆங்கில ஆசிரியர் நடுவுநின்று ஆராய்ந்துரைக்கு முரையால்இனிது பெறப்படுகின்ற தன்றோ? இவ்வானூ லாராய்ச்சியில் வெளிப்பட்ட உண்மையைக் கருத்தூன்றிப் பார்ப்பவர்க்கு, வடசொற் களையுங் குறியீடுகளையும் உடைமை பற்றித் தமிழர்க் குரியவைகள் ஆரியர்க் குரியவாதல் செல்லாமை நன்குவிளங்கும். எனவே, வறும் பெயர்களையும் குறியீடுகளையுங் கண்டுமயங்கி உண்மையைத் திரித் துணராமல், அதனை உள்ளவா றுணர்தல் மெய்யறிவினார்க்கு இன்றியமையாத கடமையாதலுந் தானே போதரும். என்றித் துணையும் விரித்து விளக்கியவாற்றாற், பழைய ‘தொல்காப்பிய நூலுட்’ காணப்படும் 'ஓரை' என்னுஞ் சொல் வானவீட்டைக் குறிக்குந் தூய தமிழ்ச்சொல்லாய்ப் பண்டைத் தமிழரால் வழங்கப்பட்டுவந்த தொன்றாவதூஉம், தமிழர்பால் வந்து ‘பகல்வழி' யளவினைக் கற்றுணர்ந்த யவனராகிய கிரேக்கரே ஏனைப் பல தமிழ்ச் சொற்களோடு அதனையுங் கற்றுப் போய்த் தாம் வரைந்த வானூல்களுள் எழுதி வைப்பாராயின ரென்பதூஉம் நன்கு புலனாதலின், அவ் ஓரை’ எனுஞ் சால்லைக் கிரேக்க மொழியெனப் பிறழவுணர்ந்து, அவ்வாற்றால் 'தொல்காப்பியம்' கி.மு. மூன்றாம் நூற்றாண் நூற்றாண் டிற்றான் டிற்றான் இயற்றப் பட்டதாதல் வேண்டுமெனக் கரைந்தாருரை பொருந்தாவுரையாதல் காண்க. மேலும், 'ஓரை' என்னும் இத் தமிழ்ச் சொல் கிரேக்க மொழியில் 'ஓரீ' எனப் பெரும்பாலுந் தமிழ் வடிவத்தோடு எழுதப் படுதலையும்28 கிரேக்கரிடமிருந்து கடன்வாங்கிய வடநாட்டு ஆரியரே அதன் தமிழ் வடிவத்தைத் திரித்து 'ஹோரா' என எழுதினார் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/161&oldid=1590785" இலிருந்து மீள்விக்கப்பட்டது