உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளின்

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

153

னிப், பாண்டிய அரசர் வழங்கிய ‘வட்டெழுத்துக்க’ L பிறப்பையும், அவற்றாற் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் காலத்தையும் ஆராயும் முகத்தால் தொல்காப்பிய காலத்தைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற் படுப்பித்தார் உரைகள் ஆராயற்பாலன. தமிழ்நாட்டில் வழங்கிய வட்டெழுத்துக்களைப் பற்றியும், இவ் விந்திய நாடெங்கும் வழங்கிய அசோக எழுத்துகளைப் பற்றியும் யாம் இற்றைக்கு இருபத்தோராண்டுகட்கு முன்னமே ஆராய்ந்து, அவ் வாராய்ச்சியைக் கி.பி. 1100 ஆம் ஆண்டு வெளிப்போந்த 'பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும' என்னும் எமது நூலில் வரைந்திட்டாம். அதற்கு எட்டாண்டுகள் கழித்துக் கி.பி.1114இல் ங்கிலத்தில் வெளியிடப்பட்டதாகிய 'தமிழாராய்ச் சிகள்’ (Tamil Studies) என்னும் நூலின்கண் அதன் ஆக்கியோரான சீனிவாச ஐயங்கார் வட்டெழுத்துக்களைப் பற்றிய எமதாராய்ச்சியினை முற்றுந் தழுவி, வட்டெழுத்துக்கள் தமிழர்க் குரியனவே யன்றி வடநாட்டில் வழங்கிய ‘பிராமி’ எழுத்துக்களின் திரிபாகா வென்றும், இற்றைக்கு மூவாயிரத்தைந் நூறாண்டு கட்கு முன்னமே தமிழரும் பினீசியர் எகுபதியரும் வாணிக வாழ்க்கையிற் கலந்துறவாடின ராகலின் எகுபதிய ரறிந்த எழுத்து முறையைத் தமிழரும் அந்நாளிலேயே அறிந்தவராயிருத்தல் வேண்டுமென்றும், இவ்வெழுத்து முறையைத் தமிழரிடமிருந்தே இந்திய ஆரியர் கற்றுணர்ந்த வராதல் வேண்டுமென்றும், மப என்னும் எழுத்தின் வடிவங்கள் பிராமி அசோக எழுத்துக்களிலும் வட்டெழுத்துக்களிலும் வேறுபட்டிருத்தலே இதற்குச் சான்றாமென்றும், ஆசிரியர் தொல்காப்பியனார் உரைக்குந் தமிழ் எழுத்தின் வடிவங்கள் வட்டெழுத்துக்களின் வடிவோடு ஒத்திருத்தல்போற் பிராமி எழுத்துக் காலத்திற்கு முன்னமே வட்டெழுத்துக்கள் தமிழ்நாட்டின்கண் வழங்கினவாதல் வேண்டுமென்றும் நன்காய்ந்துவலிய சான்றுகள் பலவற்றால் தமிழ் எழுத்துக் களின் பழைமையை இனிது விளக்கிக் காட்டியிருக்கின்றார்.” அவர் கொண்ட முடிபே எமது முடிபுமா மாகலானும் இவ்விந்தியநாட்டு எழுத்தின வடிவங்களை நன்காய்ந்து கண்ட 'ரிஸ்டேவிட்ஸ்', ‘தாமஸ்', 'பர்னல்', முதலான ஐரோப்பிய சிரியர் நடுநின்றாராய்ந் துரைக்கும் உரையும் எமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/162&oldid=1590786" இலிருந்து மீள்விக்கப்பட்டது