உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

முடிபோடு

மறைமலையம் - 24

ஒருங்கொத்து நிற்றலானுந் தமிழ் வட்டெழுத்துக்கள் ஆறாயிர ஆண்டுகளாய் வழங்குவ னவாகப், பிராமியெழுத்துக்களோ இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட வழக்கமே யுடையன வாயிருத்தலாற், பிராமியெழுத்துக்களே தமிழ் வட்டெழுத்துக்களைப் பார்த்துச் செய்யப்பட்டன வாகல் வேண்டுமல்லது, வட்டெழுத்துக்கள் பிராமி யெழுத்துக்களைப் பார்த்துச் செய்யப்பட்டனவாகல் ஒரு சிறிதுஞ் செல்லாதென்க.

அற்றேற், கி.பி.எட்டாம் நூற்றாண்டின்முன் வட்டெழுத்துக் களாற் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டாயினும் இத் தென்றமிழ் நாட்டின்கட் காணப்படாமை யென்னை யெனிற்; கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னே நீண்டு சென்றபெருங் காலத்திலேதான் தமிழருந் தமிழ் மன்னரும் மிகச் சிறந்த நாகரிக வாழ்க்கையிலிருந்தனர்; அக்காலத்திலே தான் தனித்தமிழ் மொழி எழில்நலங் கனிந்து தன் சுடரொளி விரிந்து வீறித் திகழ்ந்தது; அஞ்ஞான்றிருந்த தமிழ்ப் புலவர்கள் மெய்யறிவு சான்ற மேன்மக்களாய்ப் பல க கலைத் துறைகளிலும் அறிவுநிரம்பி அவ்வத் துறைகளிலும் அளவிறந்த விழுமிய நூ ல்களியற்றி இத்தமிழகத்தை அறிவொளியால் துலங்கச் செய்தனர்; அப்பண்டைநாளில் ஏனை நாடுகளிலிருந்த ஏனை மக்களெல்லாம் நாகரித்திலும் வளத்திலுங் குறைந்தாராய்த் திருந்திய அறிவின்றி வருந்து நிலையி லிருந்தமையின் அவரும் அவர் தம் மன்னருந் தமிழகத்தைக் கைப்பற்ற மாட்டாராயினர். அதனால், தமிழகந் தனக்குப் பகையாவார் எவருமின்றித் தன் வேந்தர் பெருமக்களின் வெண்கொற்றக்குடை நிழலில் அமைதியுற் றிருந்தது; எங்குங் கல்வியுங் கைத்தொழிலும் உழவும் மலிந்திருந்தன; நூல்களும் நூலாராய்ச்சி செய்வார் தொகையும் பெருகிக்கிடந்தன; எல்லா நூல்களும் ஏடுகளில் எழுதப்பட்டு எங்கும் பரந்து வழங்கின. அரசர்களின் ஆண்மையும் புகழும் விளங்கப் பாடிய பாட்டுகளும், அவர் தம் ஈகையுங் கொடையும் வரலாறும் விரித்த நூல்களும் ஏடுகளிற் பொறிக்கப்பட்டு எங்கும் நிலவினமையாலும், இவ்வேட்டுச் சுவடிகள் அழிந்து படுதற்குரிய நிகழ்ச்சிகள் ஏதுமே அஞ்ஞான்று நிகழாமை யாலும் அவை தம்மைக் கருங்கற்களிற் செதுக்கிவைக்க வேண்டுமென்னும் எண்ணம் பண்டைத் தமிழ் மன்னர்க்குங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/163&oldid=1590787" இலிருந்து மீள்விக்கப்பட்டது