உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 *

155

கற்றோர்க்கும் ஏனைக் குடிமக்கட்குந் தோன்றாமலே போயிற்று. அதனாலேதான் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முற்சென்ற பழந்தமிழ்க் காலத்தில் வட்டெழுத்தால் ஆக்கிய கல்வெட்டு ஒன்று தானும் இல்லாதாயிற்று. இதனை முன்னரே கஎரு ஆம் பக்கத்திலும் எடுத்துக் காட்டினேம். மற்று, வடநாட்டிற் குடிபுகுந்த பழந்தமிழரோ தென்னாட்டவரைப்போல் நாகரிகத்தில் அத்துணைச் சிறவாமையானுந், தம் நாட்டகத்தே அடுத்தடுத்துப் புகுந்த ஆரியரானுங் கிரேக்கரானும் ஊணரானுந் தொடர்பாக அலைக்கப்பட்டு அவ் வலைப் பினால் தம் அரும்பொருள்களையும் நாடு நகரங்களையும் நூற் சுவடிகளையும் இடையிடையே இழக்கலானமை யானும் அங்கிருந்த மன்னர்களும் பிறருந் தம் ஆண்மைச் செயல்களையும் பிற வரலாறுகளையும் எளிதிற் சிதைந்துபோம் பனையேடுகளிற் பொறித்துவையாமற் கருங்கற்களிற் செதுக்கிவைக்க வேண்டியவரானார். அதனாற் கல்வெட்டுகள் முதன் முதல் வடநாட்டின் கண்ணேதான் தோன்றுவவாயின. கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின் தென்னாட்டின்க ணிருந்த தமிழ்வேந்தர்களின் ஆற்றலும் ஆண்மையுஞ்

6

சுருங்கவே வடக்கிருந்த மன்னர்கள் மெல்ல மெல்லத் தமிழ்நாட்டின்கட் புகுந்து தமிழ்மன்னர்களை வென்று

அதனைக் கைக்கொள்வா ராயினர்.

இங்ஙனமாக இத் தென்னாட்டின்கட் பெருங்குழப்பங்கள் நிகழ்வுழித் தமிழ்மக்கள் தமக்குரிய அரும்பொருள்களையும் நாடுநகரங் களையும் ஏட்டுச் சுவடிகளையும் இழந்துவரலானார். வடக்கிருந்து வந்த பல்லவ அரசர்களுந் தமது வழக்கப்படி தம் ஆண்மைச் செயல்களையும் பிறவற்றையுங் கருங்கற் சுவர்களில் ஆங்காங்குப் பொறித்து வைப்பாராயினர். அப் பல்லவர் காலத்தும் அதற்குப் பின்னும் இத் தமிழகத்தி லிருந்த தமிழரசர்களும் அவ் வழக்கத்தைத் தாமுங் கைப்பற்றி ஏடுகளினும் நிலைபேறாயுள்ள கல்வெட்டுகளை அமைப் பாராயினர். தமிழ்நாட்டின்கட் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் கல்வெட்டுகள் உண்டான வரலாறு இங்ஙனமாகலின், இஃதறியாமல் அம் மூன்றாம் நூற்றாண்டிற்கு முன் வட்டெழுத்துக் ழுத்துக் கல்வெட்டு ஒன்று தானும் இல்லாமை பற்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/164&oldid=1590788" இலிருந்து மீள்விக்கப்பட்டது