உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

  • மறைமலையம் - 24

வட்டெழுத்துக்களே அஞ்ஞான்று வழங்கிற்றில வெனக் கரைவாருரை பொருந்தாப் புல்லுரை யாமென்க. நாகரிகம் மிக்க இந் நாளிற் காகிதச் சுவடிகளில் எத்தகைய வரலாறும் நூலும் எழுதிவைப்பாரையே காண்டுமன்றி, அவை தம்மையெல்லாங் கருங்கற் கற் பலகை களிலேயே பொறித்து வைப்பாரைக் காண்கிலேம். இடைப்பட்ட காலத்து வழக்கம்பற்றிக் கருங்கற்களில் நி னைவுக்குறிகளை வரைந்தமைப்பார் இஞ்ஞான்று ஒரு சிலரேனும் உளராதல் போலப், பண்டைக் காலத்துத் தமிழ் நாகரிக மாந்தரிலும் “பெயரும் பீடுமெழுதி அதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்”30 நாட்டும் வழக்கம் நிகழ்ந்து வந்தமை பழைய நூல்களிற் புலனாயினுங், கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குமுன் அங்ஙனம் நாட்டப்பட்ட நடுகல் ஒன்றுதானும் இதுகாறுங் காணக்கிடையாமையின், அவ்வியல்பினை இனைத்தென்றுணர்தல் யலா தென்று விடுக்க. மேலும், இத் தென்றமிழ் நாட்டின்கட் பழைய நகரங்கள் இருந்து அழிந்துபோன இடங்களை அகழ்ந்து, அவற்றின் கீழ்ப் புதைந்து கிடக்கும்பொருள்களை மேற்கொணர்ந்து ஆராய்வார் இன்மையின், பண்டைக் காலத்து நடு கற்களின் இயல்பினை அவ் வாராய்ச்சியின்றி முடிவுகட்டுதல் இயலா தென்பதுங் கருத்திற் பதிக்கப்பாற்று.

அசோகமன்னன் காலத்திலே அவனுக்குக் கீழடங்காமல் அவனோ டொத்த நிலையிலிருந்த சேர சோழ பாண்டியர்களாந் தமிழ்வேந்தரின் அரசியல் மாட்சி அவ்வசோக மன்னன் வெட்டுவித்த கல்வெட்டுகளிலேயே நுவலப்பட்டிருக் கின்றது; அத்துணைச் சிறந்த அத்தமிழ் மன்னர் தம் நாகரிக அரசியல் எழுத்துகளின் உதவியின்றி நடைபெறுதல் இயலாதென்பதும் ஓர்ந்துணரற் பாற்று. மேலும், வட்டெழுத்துக்களாற் பொறிக்கப்பட்ட பழைய கல்வெட்டுக்கள் கிடையாவாயினும், அவ் வெழுத்துக்களின் வடிவினைத் தெளிய விளக்கும் மிகப் பழைய தொல்காப்பிய நூல் உண்மையின், இதனினுஞ் சிறந்த சான்று பிறிதொன்று வேண்டுமோவெனவுங் கூறி மறுக்க, கி.பி. எட்டாம் நூற்றாண்டுமுதல் தமிழ்நாட்டில் வழக்கத்துக்கு வந்த கல்வெட்டுகள் அந் நூற்றாண்டிற்குமுன் அந்நாட்டின்கட் காணப்படாமையினையே ஒருபெருஞ் சான்றாய்க் கொண்டு, ஏனைப் பழைய உண்மைத் தமிழ்நூற் சான்றுகளை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/165&oldid=1590789" இலிருந்து மீள்விக்கப்பட்டது