உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

157

புறந்தள்ளி, அவ்வாற்றால் தமிழ்மொழி கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குமுன் ஓர் ஒழுங்குபட்ட நிலையை எய்த வில்லையெனக் கரையும் பார்ப்பனர், அவ்வாறு கரைதல் தமக்குந் தமக்குரியதெனக் கொள்ளும் வடமொழிக் குமே கேடு பயத்தலை யுணர்ந்திலர். என்னை? தனிச் சமஸ்கிருத மொழியிற் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் எல்லாம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டனவே யன்றி, அதற்குமுற்பட்டது அவற்றுள் ஒன்றுதானும் இன்மையின்,3" சமஸ்கிருத மொழியும் அவ்விரண்டாம் நூற்றாண்டிற்குமுன் ஓர் ஒழுங்குபட்ட நிலையை எய்தவில்லை யென்பதும், அம் மொழியிற் பழைய நூல்களெனக் கூறப்படும் இருக்கு, எசுர் முதலிய வேதங்களும் பிராமணங்களும் பிறவு மெல்லாம் பிற்றை ஞான்றைப் பார்ப்பனர் களாற் பழையனபோற் புனைந்து கட்டப்பட்டன வேயன்றி உண்மையில் அவை கி.பி. இரண்டாம் நூற்றாண் டிற்குப் பிற்பட்டனவேயா மென்பதும் முடிக்கப்படுமாதலின் என்க. கல்வெட்டுகளை மட்டுஞ் சான்றாகக் கொண்டு தமிழ்ப் பழைமையைக் குறைக்க மடிகட்டி நிற்கும் பார்ப்பனர்க்கு, அவர்கொண்ட அம்முறையே அவர் தம் வடநூற் பழைமையைக் குறைத்து, உண்மைக்கு மாறாய்ப் பெரிதொரு தலைதடுமாற்றத் தினை விளக்கக் காண்டலிற், பழைய உண்மைநூற் சான்றுகளே பண்டைக்கால நிலையினை உள்ளவாறு அளந்தறிதற்குக் கருவியாதல் தெளிந்து கொள்க. எனவே, கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து இத் தமிழ் நாட்டில் வழங்கிய தமிழ் வட்டெழுத்துப் பட்டையங்களை மட்டுஞ் சான்றாகக் கொண்டு, அவற்றிற்குப் பல்லாயிர ஆண்டு முற்பட்ட தொல்காப்பிய நூலின் காலத்தை அளக்கப் புகுதல் ‘நரிவால் கொண்டு கடலாழம் பார்க்கப் புகுத’லோடு ஒத்து நகையாடற் பாலதாமென விடுக்க. இனித் தொல்காப்பியத்தி னுதவி கொண்டே வட்டெழுத்துக்களின் காலந் துணியப்படு வதன்றி, வட்டெழுத்துப் பட்டையங்களினுதவிகொண்டு தொல்காப்பிய காலந் துணியப்படா தென்பதுங் கடைப்பிடிக்க.

இன்னுங், குமரிநாடு கடல்வாய்ப்படாது நிலவிய காலத்தில் தொல்காப்பியம்இயற்றப்பட்டதா மென்பதற்கு, அந் நூலின்கண் உள்ள குறிப்புகள் பலவுமே நன்குசான்று பகர்கின்றன. அவற்றுட் சில ஈண்டெடுத்துக் காட்டுதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/166&oldid=1590790" இலிருந்து மீள்விக்கப்பட்டது