உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

  • மறைமலையம் - 24

99

ஆசிரியர் தொல்காப்பியனார் வெறுமணல் வெளியாகிய பாலை நிலத்தை "நடுவு நிலைத்திணை எனவும், அந் நிலத்தின்கண் வேனிற்காலத்து நண்பகற் கொடுமையே மிகுந்திருக்கும் எனவுங் கூறுகின்றார்.32 நாற்புறத்துங் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நிலப் பகுதிகளாற் சூழப்பட்டு, அவற்றிடையே மிக அகன்று நீண்டு விரிந்து கிடப்பதாகிய வெறுமணல் வெளிக்கு அவர் "நடுவு நிலைத்திணை” என்று பெயர் கூறுமாற்றை உற்றாராயுங் கால், அத்தகையதொரு பெருமணல்வெளி அவர் காலத்தில் இருந்ததாகல் வேண்டுமென்பது புலனாம். இஞ் ஞான்லுள்ள இத் தமிழ்நாட்டின் கண், நாற்புறமும் நால் நிலங்களாற் சூழப்பட்டு டையே பெரிதும்விரிந்து நீண்டு வேனிற் கொடுமை மிகுந்த அத்துணைப் பெரியதொரு மணல்வெளி எங்கேனும் உள தோவென ஆராயின், அவ்வியல்பின தொன்று உளதென்பது புலனாகவில்லை. வெம்மை மிகுந்த நடுக்கோட்டிற்கு (Equtor) இஞ்ஞான்றைத் தமிழ்நாடு மிக எட்டியிருத்தலின் அவர் கூறியதொரு வேனிற்காலக் கொடுமையும் இங்குப் புலனாகவில்லை. ஆகவே, தொல்காப்பியனார் கூறிய பெருமணல் வெளியும், அதன்கண் உண்டாம் வேனில் அழற்சியும் நடுக்கோட்டை யடுத்த நிலப் பகுதியிலேதான் இருந்தன வாதல் பெறப்படும். அந் நிலப்பகுதி இஞ்ஞான்று இந்தியமாக்கடலின் கீழ் அமிழ்ந்தி நிற்பினுந், தொல்காப்பினார் இருந்த ஞான்று அது பெரியதொரு நிலப்பரப்பாய்க் குமரி ன பெயர்பெற் றிருந்ததென உணர்ந்துகொள்க. அந் நிலப்பரப்பி னிடையே யிருந்த பெரும் பாலைநிலமே அவரால் ‘நடுநிலைத்திணை எனச் சுட்டப்பட்டதாம் என்பது.

நா

அதுவேயுமன்றித், தொல்காப்பியனார், “ஒட்டகம் அவற்றோடு ஒருவழி நிலையும்”(18) என்னும் மரபியற் சூத்திரத்தில், 'ஒட்டகம்' என்னும் விலங்கினைக் குறிப்பிட் டிருக்கின்றார். தமது காலத்திருந்த நூல்களிற் பெருவர வினவாய் வழங்கிய சிற்றுயிர்களின் ஆண் பெண் அவற்றின் பிள்ளைகளை எவ்வெச் சொற்களால் வழங்குதல் மரபோ அம்மரபினை அவர் முறைப்படுத்திச் சொல்லுதற்கண் ஒட்டகம் என்னும் விலங்கும் அவரிருந்த காலத்து மக்களாற் பெரிதும் பயன்படுத்தப்பட்ட தொன்றென்பது தெற்றென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/167&oldid=1590791" இலிருந்து மீள்விக்கப்பட்டது