உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

159

விளங்கா நிற்கும். ஒரு பெரும்பாலை நிலத்தைச் சூழவுள்ள மக்களே அம் மணல்வெளியை ஊடுருவிச் சென்று வாணிகம் நடாத்துவர். அவ்வாறவர் அம்மணல் வெளியை ஊடுருவிச் செல்லுதற்கே, அந்நிலத்தில் இயற்கையே யுண்டாய் உயிர்வாழும் ஒட்டகம் என்னும் விலங்கினைப் பயன்படுத்தா நிற்பர். இவ் வுண்மை, இஞ்ஞான்றை வட ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா என்னும் பெரும்பாலை நிலத்தைச் சூழவுள்ள மக்கள் ஒட்டகத்தின் உதவியையே கொண்டு வாணிகம் நடாத்து மாற்றால் நன்குணரப்படும். இவ்வாறு பாலைநிலத்திற்கு இயற்கையாயுள்ள விலங்காய்ப், பாலைநிலத்தைச் சூழவுறையும் நாகரிக மக்களால் வாணிக வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒட்டகத்தைத் தொல்காப்பியனார் கூறுதல் கொண்டு, அவர் காலத்திற் குமரிநாட்டினிடையே கிடந்த பாலை வெளியை, அதனைச் சூழ இருந்த பண்டைத் தமிழ் மக்கள் ஒட்டகங்களினுதவி யாற் கடந்துசென்று வாணிகம் நடாத்தினமை தெளியப் படும். இஞ்ஞான்றைத் தமிழ்நாட்டில் அத்தகைய பெரும் பாலை வெளியும், அதன்கண் இயங்கும் ஒட்டகமும் இல்லாமையின், அவ் விலங்கினைக் காட்சிப் பொருட்டாக வன்றி ஊர்தியாகப் பயன்படுத்துவார் யாருமில ரென்க. எனவே, ஒட்டகம் என்னும் விலங்கும் அதன்பெயரும் பண்டைத், தமிழ்மக்கட் குரியனவே யல்லாமல் வடவாரியர்க்கு உரியன ஆகாமையால், அவர் அவ் விலங்கின் பெயராய் வழங்கும் ‘உஷ்ட்ர' என்னுஞ் சொல், 'ஒட்டகம்’ என்னுந் தமிழ்ச் சொல்லின் திரிபாதல் துணியப்படும். இவ் வொட்டகம் என்னும் விலங்கு தெற்கே நடுக்கோட்டைச் சார்ந்த வெய்ய பாலைநிலங்களி லன்றிக், குளிர் மிகுந்த வடநாடுகளில் உயிர் வாழ்வது அன்மையின், இது தென்னாட்டாவர்க்கே யுரித்தாதல் திண்ணம். ங்ஙனமாகக் குமரிநாட்டிலிருந்த பெரும் பாலைநிலத்தையும், அதனூடு சென்று வாணிகம் நடாத்திய பண்டைத் தமிழர் அம் மணல்வெளியைக் கடத்தற்குப் பயன்படுத்திய 'ஒட்டகம்’ என்னும் விலங்கையும் ஆசிரியர் தொல்காப்பியனார் நன்கு குறிப்பிடுதலின், அவரும் அவரியற்றிய தொல்காப்பியமுங் குமரிநாடு கடல்வாய்ப் படுதற்கு முன் இருந்தமை தேற்றமாம். என்றிதுகாறுந் தொல்காப்பிய காலத்தைப் பற்றி யெழுந்த ஆராய்ச்சியின்

ய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/168&oldid=1590793" இலிருந்து மீள்விக்கப்பட்டது