உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

  • மறைமலையம் - 24

முடிபாகத், 'தொல்காப்பியங்' குமரிநாடு கடல் கொள்ளப் படும் முன், அஃதாவது இற்றைக்கு நாலாயிரத்தைந் நூறாண்டுகட்கு முன்னும், அதற்கும் முன்னே பாரதப்போர் நிகழ்ந்த காலத்து உடனிருந்த 'முரஞ்சியூர் முடிநாகராயர்', 'பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி', 'நெட்டிமை யார், 'நெடும்பல் லியத்தனார்', முதலான தலைமைச்சங்கப் புலவர் சிலர்க்குமுன் அஃதாவது இற்றைக்கு ஐயாயிரத்து ஐந்நூறியாண்டுகட்கு முன்னும் இயற்றப்பட்ட மிகப் பழையதொரு தனித்தமிழ் நூலாதல் பெறப்பட்டது. பெறவே, அது தலைச்சங்க காலத்து நூலாகுமே யல்லாமற், குமரிநாடு கடல்வாய்ப் புக்கபின் எழுந்த இடைச்சங்க காலத்து நூலாதல் செல்லா தென்பதுந் தானே போதரும். போதரவே, அதனை இடைச்சங்ககாலத்து நூலென்ற இறையனாரகப்பொருள் உரைப்பாயிரவுரைக்கூற்று ஆசிரியர் நக்கீரனார் உரைத்த தாகாமையும், அஃது உண்மை வரலாறு அன்மையுந் தாமே பெறப்படும். இறையனாரகப் பொருள் முகத்துள்ள 'நூற்பாயிரவுரை' 'உரைப்பாயிரவுரை' என்னும் இரண்டுள் நூற்பாயிரவுரை முற்றும் நக்கீரனாரே கூறியதாதலும், அதன்பின் போந்த உரைப்பாயிரவுரை வழிவந்த பிறரொரு வரால் உரைக்கப்பட்டதாதலும் பகுத்துக்காட்டி விளக்கியவழி, உரைப்பாயிரவுரையுட் போந்த வரலாற்றுக் குறிப்புகள் மெய்யோடு பொய்யும் இடைமிடைந்தன வாயிருத்தலைப் பகுத்துக் காட்டுவான் புகுந்து அதன்கண் மெய்யாவன இவை யெனவும் பொய்யாவன இவை யெனவும் நிரலே இதுகாறுங் காட்டிவந்தன போக, எஞ்சி நிற்பனவுங் காட்டுகின்றாம்.

அடிக்குறிப்புகள்

1. See Pages 154-160 'Dravidian India' by MR. T.R. Sesha Iyengar, M.A Dr. T. Goldstucker's Panini, P.58; Panini Office Publication.

2.

3.

Dr. A.A. Macdonll' Aistoryof Sanscrit Literature', P. 430.

4.

Dr. S.K. Belvalkar's Systems of Sanscrit Grammaï P.83.

5.

Do Do Do. P.64.

6.

Dr. Hermann Jacobin inIndian Antiquary Vol. XXIII. PP. 154. sq. Mr. B.G. Tilak in The Arctic Home in the Vedas and Dr. Bloomfeield.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/169&oldid=1590794" இலிருந்து மீள்விக்கப்பட்டது