உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

24. இறையனாரகப் பொருளுரை யாராய்ச்சித் தொடர்பு

ாங்

இனி, இடைச் “சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்பது; அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது” என்னுங் குறிப்பு உண்மை வரலாறு தெரிப்ப தொன்றேயாம். குமரிநாடு கடல்கொண்டது சிறிதேறக்குறையக் கி.மு. 2000 த்திலாமென்பதை மேலே 647 ஆம் பக்கத்தில் விளக்கிக் காட்டினமாகலின், அப்பெருங் கடல்கோளுக்குப் பின் பாண்டிமன்ன ரரசு ஓர் ஒழுங்கு பெற்றுத் திரும்பவுந் தமிழ்ச்சங்கங் கூட்டப்படுதற்கு மூன்று நான்கு நூற்றாண்டுகள் சென்றிருத்தல் வேண்டும். ஏனென்றால், இரண் ண்ட கடல்கோள் ஒன்று இலங்கையிற் பாண்டுவாசான் அரசுபுரிந்த கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலும், மூன்றாங் கடல்கோ ளொன்று கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலும் நிகழ்ந்தமை இலங்கைத் தீவின் வரலாற்றிற் குறிக்கப்பட் டிருத்தலின் இடைச் சங்கங், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த கடல்கோளுடன் முடிவடைந் திருத்தல் வேண்டுமாகலானும், இடைச்சங்கம் நிகழ்ந்த காலம் 1180 ஆண்டுகளாகுமென மேலே 642 ஆம் பக்கத்தில் விளக்கிக் காட்டினமாகலின் கிறித்து பிறப்பதற்கு முற்சென்ற அவ் ஐந்நூறாண்டுகளோடு இவ்விடைச்சங்க காலத்தையும் கூட்டக் கி.மு. 1680 ஆம் ஆண்டையடுத்து இடைச்சங்கந் தோன்றி யிருத்தல் வேண்டுமாகலானும் என்பது. அற்றாயினும், மூன்றாங் கடல்கோள் நிகழ்ந்த கி.மு. மூன்றாம் நூற்றாண்டையே இடைச் சங்கத்தின் இறுதிக் காலமாய்க் கொள்ளலாகாதோ வெனிற், கூறுதும்: இரண்டாங் கடல்கோள் நிலப்பரப்பை மிகுதியும் விழுங்கிச் சென்ற தொன்றாயின், அந் நிலப் பரப்பின்கண் நடைபெற்ற சங்கமும் அதனோடு உடனழிந் திருக்கவேண்டு மாகலின் அது பின்னுங் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு வரையி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/171&oldid=1590796" இலிருந்து மீள்விக்கப்பட்டது