உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

L

3

163

லிருந்த தெனக் கோடலாகாது. மற்று அக்கடல்கோள் அத்துணைப் பெரியதன்றாக, மூன்றாங் கடல்கோள் அத் துணைப் பெரியதென்றாமாயின் இடைச் சங்கங் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே தான் முடிவடைந் திருத்தல்வேண்டும்; அஃதெங்ஙன மாயினுங், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுமுதல் மூன்றாம் நூற்றாண்டுவரையிற் சென்ற இருநூறாண்டுகளில் இரண்டு கடல்கோள் நிகழ்ந்ததனை உற்றுக் காணுமிடத்து, இந்நிலவுலக அமைப்பிற் பேரிடர் பயப்பனவாகிய பெருமாறு தல்களும் பெருங் குழப்பங்களும் அப்போது அதன் தென்பகுதி யில் நிகழ்ந்தமை தெளியப்படும். அவ்வாறு அப்பெருந் துன்ப நிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்குதற்கு ஓர் அறிகுறியாகவே கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு சிறுகடல்கோள் நிகழா யிற்றெனக் கொள்ளினும், அச்சிறு கடல்கோளை நிகழலாயிற் றெனக் கொள்ளினும், அச் சிறுகடல்கோளை யடுத்துத் தோன்றிய பெருந் துன்ப நிகழ்ச்சியினிடையே இடைச்சங்கம் இருந்ததாயினும் அஃது அப்போது செவ்வனே நடைபெற்ற தாகாது. ஆகவே, இடைச்சங்கங் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் ஒடுகிற்றெனக் கொள்ளினும், அல்லது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஒடுங்கிற்றெனக் கொள்ளினும் ஈண்டை காவதோர் இழுக்கில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அது முடிவடைந்ததெனக் கொள்ளின், கி.மு. 2000த்தில் நிகழ்ந்த முதற்கடல்கோளுக்குப்பின் ஐந்நூறாண்டுகள் கழித்து இடைச்சங்கந் துவங்கலாயிற்றென்று கொள்ளல் வேண்டும். இனி, அவ் விடைச்சங்க மிருந்து தமிழாராய்ந்த இடங் கபாடபுரம் என்ற உரைத்தொடரிற் 'கபாடபுரம்' என்னு சொல் வடசொற்றொடரா யிருத்தலானும் இடைச்சங்கம் நடைபெற்ற அப் பழைய காலத்தே அத்தகைய வடசொற் றொடர் வழங்கினமைக்குச் சான்று இல்லாமையானும், அக் 'கபாடபுரம்' என்னும் பெயர் வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தின்கட் காணப்படுதலின் அவ் இராமாயணக்கதை இத் தமிழ்நாட்டின்கட் டெரியத் துவங்கிய கி.பி. முதல் நூற்றாண்டிற்குப் பின்னன்றி அதற்குமுன் அப்பெயர் இங்கு வழங்குதலாகாமையானும் அச்சொற்றொடர் நக்கீரனார்

எழுதியதாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/172&oldid=1590797" இலிருந்து மீள்விக்கப்பட்டது