உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம்

24

அற்றேற் ‘கபாடபுரம்' இருந்தது பொய்யோ வெனிற், பொய்யன்று; என்னை? அவ் வடமொழிப் பெயராற் கூறப்பட்ட அப் பழந்தமிழ் நகரம் பண்டைநாளில் ‘அலைவாய்’ என்னுந் தூய தமிழ்ப்பெயரால் வழங்கப்பட்டதாகும். 'அலைவாய்' என்னுஞ்சொல் ‘அலையையுடைய கடலை நோக்கும் வாயில் எனப் பொருடந்து, அவ்வாயிலையுடைய பாண்டியனது தலைநகருக்குப் பெயராயிற்று. இத் தூய தமிழ்ச்சொல்லின் மொழிபெயர்ப்பாகவே 'கபாடபுரம்' என்னும் வடமொழிப் பெயர் வான்மீகியாராற் குறிக்கப் பட்டது. 'கபாடம் என்பது ‘வாயிற்கதவு' எனவும் ‘புரம்' என்பது நகரமெனவும் பொருடரு வனவாகும். “பொன் நிறைந்ததாயும், அழகுடைத்தாயும், முத்துமணிகளால் ஒப்பனை செய்யப்பட்டதாயும், பாண்டியர்க்கு இசைந்த தாயுமுள்ள கவாடத்தை வானரவீரர்காள் பார்க்கக் கடவீர்கள்' என்று சுக்கிரீவன் கூற்றாகவைத்து வான்மீகியார் கூறுதல் காண்க. இவ் 'அலைவாய்' நகரிற் பழந்தமிழ்த் தெய்வமாகிய முருகன்கோயி லிருந்தமை அலைவாய்ச் சேறலும்நிலைஇய பண்பே” என்று நக்கீரனார் 'திருமுருகாற்றுப் படை’யிற் கூறுமாற்றால் அறியப்படும். பழைய அலைவாய் நகர் கடல்கொண்டழிந்தபின், அந்நகரைக் கவர்ந்த கடலின் கரைக்கண் உள்ள ‘திருச்செந்தூரில்' அம் முருகன் கோயில் அமைக்கப்படலாயிற்றென்க. எனவே, கபாடபுரத்தின்கண் இடைச்சங்கம் இருந்ததென்னும் உரை நக்கீரருரை யன்றாயினும், அதிற் போந்த வரலாறு மெய்வரலாறேயாமென ஓர்க.

66

இனிக், கடைச்சங்கம் நடைபெற்ற ஞான்று பாண்டி நாட்டிற் பன்னீரியாண்டு மழைவளங் குன்றிப் பெரியதொரு வற்கடந்தோன்ற மன்னுயிர்கள் மடிந்தனவாகலின், அச்சங்கம் அவ்வற்கடம் நீங்கும்வரையிற் கலைந்து அது நீங்கியபின் திரும்பக் கூடிற்றென அவ்வுரைப்பாயிரங் கூறும் வரலாறு உண்மையாகவே காணப்படுகின்றது. பாண்டி நாட்டை விட்டுவேறு சேயநாடுகளுக்குச் செல்லாதநம் தமிழாசிரியன் மார் பன்னீரியாண்டு உயிர்களை வருத்திய அவ் வற்கடத்தைப் பாண்டியநாட்டின்கண் நிகழ்ந்த தொன்றாக வைத்துரைப் பினும் அக் கொடிய வற்கடஞ் சேய்மைக் கண்ணுள்ள வடநாடுகளிலும் அப் பன்னீரியாண்டு நிகழ்ந்ததென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/173&oldid=1590798" இலிருந்து மீள்விக்கப்பட்டது