உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

165

இனிது

வடமொழியிலுள்ள சமண் நூலாராய்ச்சியால் புலனாகின்றது. கிறித்து பிறப்பதற்குமுன் மூன்றாம் நூற்றாண்டிலிருந்த ‘பத்ரபாகு' என்னுஞ் சமண்முனிவர் காலத்தில் அக்கொடிய வற்கடம் பன்னீரியாண்டு நிகழ்ந்ததென வடநாட்டின்கண் இயற்றப் பட்ட சமண்நூ லொன்று கூறுதலால்,2 அஃது அஞ்ஞான்று வடநாடு தன்னாடு முழுவதூஉம் பரவியிருந்தமை புலனாம். கி.பி. இரண்டாம் நூற்றண்டில் இயற்றப் பட்டதாகிய மணிமேகலையிலும்,

பன்னீ ராண்டு பாண்டிநன் னாடு

மன்னுயிர் மடிய மழைவளம் இழந்தது

(14, 5556)

என இவ் வற்கடகாலங் குறிப்பிடப்பட் டிருத்தலின், இது மணிமேகலை காலத்திற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னமே தென்னாட்டின்கண்ணும் நிகழ்ந்தமை ஐயமின்றித் துணியப்படும். இனிச், சமண்முனிவரான ‘பத்ரபாகு’ என்பவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியி லிருந்தவ ரென்பது வரலாற்று நூலாசிரியரால் துணியப்பட்டிருத்தலின், அம் முனிவர்காலத்தில் நிகழ்ந்ததாகிய அக்கொடிய வற்கடமுங் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்தமை தெளியப்படும். அவ்வற்கடகாலத்திற்கு முன்னிருந்த கடைச்சங்கம், அவ் வறட்சிக் காலத்திற் கலைந்ததென்பதனாற், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றில் நிகழ்ந்த இரண்டாங் கடல்கோளுடன் ஒடுங்கிய இடைச்சங்கத்திற்குப்பின் ஓரைம்பது ஆண்டுகளாவது கழித்துத்தான் கடைச்சங்கங் கூட்டப்பட்ட தாகல் வேண்டும். மூன்றாங் கடல்கோளும் பன்னீரியாண்டு வற்கடமும் ஒருங்குதோன்றிய பேர்இடரான காலத்திற் கலைந்த கடைச்சங்கத்திற்குப்பின், அவ்விடர் நீங்கிய காலத்தில் மீண்டுங் கூட்டப்பட்டதாகிய சங்கத்தை நான்காஞ் சங்கமென்றுரையாமற் கடைச் சங்கமே யென்றுரைத்த லென்னையெனின்; கடைச் சங்கம் அவ்வாறு கலைந்ததும் மீண்டும் கூட்டப்பட்டதும் ஓரரசனது ஆட்சிக் காலத்திலேயே நிகழ்ந்தனவென்று அவ் வுரைப்பாயிரமே

தெளிவாகக் கூறுதலால், ஓரரசனாலேயே கலைத்துக்

கூட்டப்பட்ட அது வெவ்வேறு சங்கங்களாகாமல் ஒரே சங்கமாகவைத்து வழங்கப்படுவதாயிற் றென்க. இவ்வாற்றால், மூன்றாம்முறை தோன்றிய கடல்கோள் இலங்கைத் தீவைச்சேர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/174&oldid=1590799" இலிருந்து மீள்விக்கப்பட்டது