உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

  • மறைமலையம் - 24

நூறாயிரங் கடற்றுறைப் பட்டினங்களையுந், தொள்ளாயிரத் தெழுபது செம்படவர் குப்பங்களையும், நானூற்றெழுபது முத்துச்சலாபத் தூர்களையுங் கொள்ளைகொண்டு போயினும்’3 அஃது இத் தமிழ்நாட்டின் தென்பகுதியை அத்துணை மிகுதியாய் வாய்ப்பெய்து கொள்ளவில்லை யென்பதூஉம், அதனால் அப்போதிருந்த பாண்டியவேந்தன் தானுந் தன் நாடும் அழிந்துபடாமற் கொடிய அவ் வற்கடத்தினால் மட்டுந் துன்புற்று அச்சங்கத்தை அது நீங்குங்காறுங் கலைத்து அது நீங்கியபின் மீண்டுங் கூட்டினா னென்பதூஉம், அதுபற்றியே அம்மூன்றாம் சங்கங் கடைச்சங்கமென ஒரு பெயரே பெறலாயிற்றென்பதூஉம் அறியப்படும். மற்றுத், தலைச்சங்க இடைச்சங்கங்களோ முதற்கடல்கோள் ல்கோள் இரண்டாங் கடல்கோள்களால் வாய்ப்பெய்து கொள்ளப்பட்ட பெரிய நாடுநகரங்கள் மன்னர்கள் மக்களோடு ஒருங்கழிந்து போனமையின், அவற்றை யொருதொடர்பு படுத்துவர் இல்லையாய் ஒழிய, அவை ஒரு சங்கமென ஒன்றாய் வைத்து வழங்கப்படா வாயினவென்பது. இனி, இடைச்சங்கம் அழிந்துபட்ட கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக்குப்பின் அதன் இடையிற் றுவங்கிய கடைச்சங்கம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் முதலில் ஒருகாற் கலைந்து மீண்டுங்கூடிப், பின் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈறுவரையில் நடைபெற்று முடிவெய்தியதாகலின் அதன் முழுக்காலவெல்லை அறு நூற்றைம்ப தாண்டுகளே யாகின்றன. மேலே 642 ஆம் பக்கத்திற் கடைச்சங்கம் நடைபெற்ற முழுக் காலவெல்லை 980 ஆண்டுகளென்று கணக்குச் செய்யப்பட்ட தாயினும், அதன் முழுக்காலவெல்லை 650 ஆண்டுகளேயாதல் தெளியற்பாற்று; அற்றேல், இது முன்னதனோடு முரணாதோ வெனின் முரணாது; என்னை, ஆண்டு அரசர் ஒருவர்க்கு ஒரு குத்துமதிப்பாக இருபதாண்டு வைத்து நாற்பத்தொன்பதின் மர்க்கும் 680 ண்டுகள் கணக்குச் செய்யப்பட்டன; ஆனால், அதனை நடாத்திய அவ் வரசர் நாற்பத்தொன்பதின்மரிற் பலர் குறைந்த வாழ்நாளுடை யராய்ச் செல்லுதலும் இயல்பேயாகலின், அக் கணக்கு இப்போது 650 ஆண்டுகளில் வந்து ஓர் உறுதிப்பட்டு முடியலாயிற்றென்க.

இன்னும், 'இறையனாரகப் பொருள்' வந்த வரலாறு தெரிக்கும் உரைப்பகுதியும் ஆசிரியர் நக்கீரனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/175&oldid=1590800" இலிருந்து மீள்விக்கப்பட்டது