உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

167

உரைத்ததாகாது என்னை? அதன்கட் காணப்படுங் குறிப்புகள் பல பொருந்தாதனவாயிருத்தலின் அப் பொருந்தாக் குறிப்புகள் யாவையோவெனிற் காட்டுதும்: 'பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றபின், மழை மிகப்பெய்து நாடு செழித்தமையிற், கலைத்த கடைச்சங்கத்தைத் திரும்பக் கூட்டலுறும் பாண்டியன் 'நூல்வல்லாரைக் கொணர்க' என ஒற்றரை எல்லாப் பக்கமும் போக்க, 'எழுத்ததிகாரமுஞ் சொல்லதி காரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குத் தலைப் பட்டிலேமென்று வந்தார். அதனால் அரசன் கவலை பெரிதுடையனாக, அவற்கு இரங்கி ஆலவாயமர்ந்த அவிர்சடைக் கடவுள் அறுபது சூத்திரங்களாலாய இச்சிறு நூலை ஆக்கி, அதனை மூன்று செப்பேட்டிலெழுதித் தான் அமர்ந்த இருக்கையின்கீழ் இ அதனைக் கோயிற்பூசகன் கண்டெடுத்துக் கொணர்ந்து அரசன்பாற் காட்ட, அதனை அரசன் தன்பால் மீண்ட அந் நூல்வல்லார் கைக்கொடுத்து, அதற்கு உரைகாண்கவென, அவரும் அதனை ஏற்றுப்போய் உரைகண்டுழி, ஒருவருரைத் தவுரை மற்றொருவ ருரைத்த வுரையொடு மறுதலைப்பட்டு, உண்மைப் பொருள் இதுதான் என்பது துணியப்படாதா யொழியப் பின்னர் இறைவனருளாற் பெற்ற உருத்திரசன்மரால் நக்கீரனா ருரைத்தவுரையே மெய்யுரையெனத் துணிந்தார்.” என்பது இந்நூல் வரலாற்றின் சுருக்கமாகும். இவ்வரலாறு கொண்டு, பன்னீரியாண்டு வற்கடம் நேர்தற்கு முன் நடைபெற்ற கடைச்சங்கத்திருந்த புலவரனைவரும் பொருளதிகாரம் வல்லுநராயிருந்தன ரென்பதூஉம் அவ் வற்கடத்தின்பிற் றிரும்பக் கூட்டப்பட்ட கடைச்சங்கத்திற் போந்த புலவரே பொருளதிகாரவுணர்ச்சி நன்கு வாயாதாவராயின ரென்பதூஉம் அறியப்படும். பன்னிரண்டு ஆண்டுகட்குமுன் கலைந்து பின்னர் அது திரும்பக் கூட்டப்படுதற்குள் முன்னிருந்த புலவரனைவரும் மடிந்து போயினாலன்றிப் பொருளதிகார வுணர்ச்சி இல்லையா யொழிதல் ஏலாதன்றே! திரும்பக் கூட்டப்பட்ட அக் கடைச்சங்கத்திற் பொருளதிகாரம் வல்லார் 6 எவரும் இருந்திலராயின், அகப்பொருளிலக்கண மாகிய பாண்டிய மன்னன் அவர்

றையனாரகப் பொருளைப்

கைகொடுத்து அதற்குப் பொருள்காணச் சொல்லுதலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/176&oldid=1590801" இலிருந்து மீள்விக்கப்பட்டது