உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

  • மறைமலையம் - 24

அவருள் ஒருவராகிய நக்கீரனார் அதற்கு மெய்யுரை கண்டாரென்றலும் யாங்ஙனம் பொருந்தும்? முன்னரே பொருளதிகார வுணர்ச்சி நன்கு வாயாதவராயின் நக்கீரனார் அதற்கு அத்துணை விழுமியதொரு விரிவுரை யுரைத்து அகப்பொருளிலக்கணங்களெல்லாம் ஒருங்கெடுத்துத் தளித்தல் யாங்ஙனம் கைகூடும்? பொருளதிகார வுணர்ச்சி யிலராயின், தொல்காப்பியப் பொருளதிகாரத்திலிருந்து பல சூத்திரங்களைத் தமதுரையில் நக்கீரனார் எடுத்துக் காட்டி விளக்குதலென்னை? என்று இவ்வாறெல்லாந் தடை நிகழ்த்துவார்க்கு, அவ் வரலாறு உண்மையன்றாதல் தெற்றென விளங்கா நிற்கும்.

மேலும், இறைவனே அந்நூலை இயற்றித் தந்தா ரென்பதும் நம்புதற் குரித்தன்றாம். மக்களறிவு விளங்குதற்கு கருவிகளான பல அமைதிகளை வகுத்து, அவ்வாற்றான் அவரறிவினுண் ணின்று அதனை யியக்கி, அம் முகத்தால் அம்மக்கடாமே பல அரும்பெரு நூல்களையும் புதுமை களையும் ஆக்குமாறு இறைவன் புரிந்து வருதலைக் காண் கின்றாமே யன்றி, அவன்றானே நூல்களையும் புதுமைகளையும் ஆக்குதல் யாண்டுங் கண்டாமில்லை. மேனாட்டு வெண் மக்கள் நிலத்திலும் நீரிலும் வானிலுஞ் செல்லுமாறு அமைத்திருக்கும் பொறிகளின் புதுமைகளைக் காண்பவர்க்குக், கடவுளன்றி மக்களும் இங்ஙனம் இவற்றைச் செய்தல் இயலுமோ என்று இறும்பூது எழாநிற்கும். இத்தகைய புதுமைகளெல்லாம் மக்களறிவினாற் செய்யப் படுவன வாயிருக்க. இவற்றோடொத்த அருமைப்பாடு இலவாய், மக்களியற்கை உலக வியற்கைகளை யுள்ளவாறு ஆராய்ந்து விளக்கும் ஆராய்ச்சி யொன்றேயுடைய இறையனாரகப் பொருள்' போன்ற நூல்கள் மட்டும் றைவனால் ஆக்கப்பட்டன வென்றல் ஒரு சிறிதும் நம்பற்பாலதன்றாம். ஆகவே, பொய்யும் புரட்டும் நிறைந்த கதை நூல்களையுங்கூட இறைவன் வாய்மொழியெனக் கூசாதுரைக்கும் பிற்காலத்துப் பொய்யர் மலிந்த புராண காலத்திலே, இக் கதையுங் கட்டிவிடப்பட்ட தொன்றாகல் வேண்டுமேயல்லாது, பொய்யா நாவினரான நக்கீரர் முதலான சங்கப்புலவர் காலத்தில் இக்கதை வழங்கிய தாகாது. தொல்காப்பிய பொருளதிகாரத்திலுள்ள ‘களவியல்’,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/177&oldid=1590802" இலிருந்து மீள்விக்கப்பட்டது