உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

L

169

‘கற்பியல்', என்பன மிக விரிந்து கிடத்தலின், அவற்றைச் சுருக்கி அறுபது சூத்திரத்தில் ஒரு சிறு நூலை எவரோ ஒரு சிறந்த புலவர் இயற்றி, அதனைப் பனையேட்டிற் பொறித் துவைப்பிற் செல்லரித்துவிடுமென அஞ்சிச், செப்பேட்டிற் பொறித்து வைத்தா ராகல் வேண்டும். அஃது ஆலவாய்க் கோயிலில் இறைவன் திருவுருவத்தின் கீழ் வைக்கப்பட்டிருந் ததனை உற்றுநோக்குமிடத்துப், பண்டொருகாலத்திருந்த அக் கோயிற் பூசகரொருவராதல், அல்லதவர்க்கு நேயரான பிறரொருவராதல் அந்நூலை யியற்றினாராகல் வேண்டும். பின்னர் அஃது றைவன் திருவுருவத் திருவுருவத் தவிசின்கீழிருந்து எடுக்கப்பட்ட ஏதுவினால்,அஃது இயற்றப்பட்ட தாகுமெனக் கருதிவிட லானார். பாண்டியனது கவற்சி கண்டு இறைவனே யியற்றினனாயின், உடனே வெளிப்படுக்கப்படுவ தாகிய அந் நூலைச் செல்லுக் கஞ்சிச் செப்பேட்டிற் பொறிக்க வேண்டுவது இன்றாம். செப்பேட்டிற் பொறிக்கப்பட்ட தென்பது கொண்டே அது பண்டிருந்த புலவரொருவரால் ஆக்கப்பட்ட தென்பது போதரும்.

இறைவனாலேயே

இங்ஙனங் கண்டெடுக்கப்பட்ட இறையனாரகப் பொருள் என்னும் நூல் திட்பநுட்பஞ் செறிந்து, பரந்த தொல்காப்பியப் பொருளிலக்கணச் சுருக்கமாய், அவ்விலக்கணப் பொருளைத் தெளித்துரைக்கும் பெற்றி கண்டே, பாண்டிமன்னன் அதனை வழங்குவித்தற் பொருட்டு அதற்கொரு நல்லுரை காணுமாறு புலவரை ஏவினான். ஒரு நூலுக்குப் பலர் உரை வகுக்குங்கால், அப் பலருரையும் ஒன்றோடொன் றொவ்வாமலிருத்தல் எங்கும் நிகழும் இயற்கை நிகழ்ச்சியேயாம். இனி, அவ்வுரைகள் பல வற்றுள்ளுஞ் சிறந்ததொன்றனைத் தெரிந்தெடுத்தல் பேரறிவு வாய்ந்த சான்றோர்க்கு எளிதிற் கைகூடுவதேயாகவும், இதன் பொருட்டுத் தெய்வத்தன்மை மிக்க ஓர் ஊமைப்பிள்ளையி னுதவியைத் தேடினாரென்றல், பின்வந்த புராண காலத்தவர் கட்டிவிட்ட கதையேயாகுமல்லால், உண்மைப் பேரறிவு சான்ற சங்கப் புலவர் குழாத்திற்குச் சிறிதும் அடாது. அப் புலவர் பெருமக்கள் தம்முள் இகலாமைப் பொருட்டுத், தம்மாற் பெரிது பாராட்டப்பட்ட ‘உருத்திரசன்மர்' என்னும் நடுநிலை திறம்பாப் புலவர்பெருமானை அவற்றுள் விழுமியவுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/178&oldid=1590803" இலிருந்து மீள்விக்கப்பட்டது