உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

  • மறைமலையம் - 24

இதுவெனத் தேற்றும் நடுவராக எல்லாரும் ஓருப்பட்டு வைத்து, அவர் தம்மால் நக்கீரனாருரை யே அந்நூலுக்கு

மெய்யுரையெனக் கண்டாரென்க. இவ் வுண்மை நிகழ்ச்சியே பிற்போந்த புராண காலத்தவரால் திரித்துரைக்கப்பட்ட தாகலின், இவ்வுரைப்பாயிரப் பகுதி நக்கீரனாருரைத்த தன்றென்பது ஒருதலை.

இனி, வ் ‘இறையனாரகப் பொரு’ளுக்கு நக்கீரனார் தாம் உரைத்த உரையைத் தம் மகனார் கீரவிகொற்றனார்க்கு விளக்கிச் சொல்லி அதனை அவர்கைக் கொடுத்தார்; கீரவிகொற்றனார் அங்ஙனமே அதனைத் தம் மாணாக்கர் தேனூர் கிழார்க்கு விளக்கிச் சொல்லி அதனை அவர்கைக் காடுத்தார்; அவர் அதனைப் படியங் கொற்றனார்க்குக் கொடுத்தார்; படியங்கொற்றனார் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கும், அவர் மணலூராசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேந்தனார்க்கும், அவர் செல்லூராசிரியர் ஆண்டை பெருங்குமரனார்க்கும், அவர் திருக்குன்றத் தாசிரியர்க்கும், அவர் மாதவௗனார் இளநாகனார்க்கும், அவர் முசிறி யாசிரியர் நீலகண்ட னார்க்குமாக அதனை விளக்கி யுரைத்து அவ்வுரையினை ங்ஙனம் வழிவழியே வழங்குவித்தார் என்னும் உரைப்பகுதியும் நக்கீரனார் உரைத்ததாகாது; என்னை? நக்கீரனார் தமக்குப் பின்வந்த பத்துத் தலைமுறைப் புலவரை முன்னெடுத்துரைத்த லாகாமையால். தலைமுறைக்கு முப்பதாண்டு வைத்துக் கணக்குச் செய்யின், இப் பதின்மர்க்கும் முந்நூறாண்டுகளாகும். இறுதிக்கண் நின்ற முசிறியாசிரியர் நீலகண்டனார் ஆசிரியர் நக்கீரனார்க்கு முந்நூறாண்டு பிற்பட்டு வந்தோராகையால், அவரே பத்துத் தலைமுறை கூறும் உரைப் பகுதியினைச் சேர்த்தாராகல் வேண்டுமென்பது.

ஒரு

ப்

மேலும், பன்னீரியாண்டு வற்கடம் நிகழ்ந்ததும், அது நிகழ்ந்த ஞான்று கடைச்சங்கங் கலைக்கப்பட்டு அது நீங்கியின் திரும்பக் கூட்டப்பட்டதும் உண்மையேயாயினும், அவ்வாறது பெயர்த்துங் கூட்டப்பட்டுழி 'இறையனாரகப் பொருள்' கண்டெடுக்கப்பட்ட தென்றலும், அப்போததற்கு நக்கீரனார் முதலான ஆசிரியர் உரைகண்டாரென்றலும் மெய்யாகா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/179&oldid=1590804" இலிருந்து மீள்விக்கப்பட்டது