உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -3

171

ஏனெனில்,அவ் வற்கடமுங் கடைச்சங்கங் கலைத்துக் கூட்டப்பட்டதும் மேலே காட்டியவாறு கிறித்து பிறப்பதற்கு இருநூற்றைம்பதாண்டுகளின் முன் நிகழ்ந்தன வாகும்; மற்று, ஆசிரியர் நக்கீரனாரோ கிறித்து பிறந்த முதல் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தோராதலை மேலே 579 ஆம் பக்கத்தில் விளக்கிக்காட்டினேம். தமது உரை அரங்கேறியது உக்கிரப் பெருவழுதியின் அவைக்களத்திலே யாம் என்று நக்கீரனாரே கூறுதலாலும், அவ்வுக்கிரப் பெருவழுதி யென்பான் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியே' யாவனென மேலே 592, 593 ஆம் பக்கங்களிற் காட்டப்பட்டிருத்தலாலும், வ்விருவர் காலமுங் க காலமுங் கி.பி.முதல் நூற்றாண்டிற்குமேற் செல்லாமை யாலுங் கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சிகளைக், கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த வற்கட காலத்தை யடுக்கவைத் துரைக்கும் அவ்வுரைப் பகுதி பெரியதொரு தலைதடுமாற் றத்தை விளைக்கக் காண்டலின், அது பிற்காலத்தவர் எழுதி நுழைத்ததே யல்லாமல் நக்கீரனார் உரைத்த தன்றென ஓர்க. இவ்வாறாக, ஆக்கியோன் பெயர் முதலிய நூற்பாயிர வுறுப்புகள் பதினொன்றனையும் விளக்கிச் சொல்லும் நக்கீரனாரது பாயிரவுரைக் கிடையே மடுக்கப்பட்ட உரைப்பாயிரைவுரை, நக்கீரனார் தம் மாணாக்கர் மரபில் வந்த பின்னையோர் ஒருவராற் சேர்க்கப் பட்டதாதல் தெளிந்து கொள்க. “அது பாயிரத்துள்ளே உரைத்தாம்” என நக்கீரனார் தமதுரையிற் குறிப்பிட்டவை, தாம் உரைத்த நூற்பாயிரவுரை

யிலுள்ளனவற்றையே சுட்டக் காண்டுமன்றிப், பிறர் அதனிடையே செருகிய உரைப் பாயிரத்தி லுள்ளவற்றை யல்லாமையால், நக்கீரனார் தம் அவ் வுரைக்குறிப்புக் கொண்டு பாயிரவுரை முற்றும் நக்கீரனாரே யெழுயதிதா மென்றார் கூற்று, அவ் வேறுபாடுகளைப் பகுத்தறிய மாட்டார்தங் கூற்றாயினவாறு கண்டுகொள்க; இதனை

உரைத்தாம்.

இனி, முதற்சூத்திர வுரையினீற்றில்

முன்னரும்

‘என்மனார்

என்பதற்குச் ச் சொன்முடிபு க கூறிய உரைப்பகுதியும் நக்கீரனாருரைத்ததன்றென்பது மேலே 629 ஆம் பக்கத்தில் விளக்கிக்காட்டினாம்; அங்கே அதனைக் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/180&oldid=1590806" இலிருந்து மீள்விக்கப்பட்டது