உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

  • மறைமலையம் - 24

L

இனி, இறையனாரகப் பொருட் சூத்திரங்களுக்கு நக்கீரனார் உரைத்த உரைக்கிடையே அவர் தம்மால் மேற்கோள்களாகக் காட்டப்பட்ட செய்யுட்கள், “அகநானூறு, ‘ஐங்குறுநூறு’, 'குறுந்தொகை' 'நற்றிணை' ‘கலித்தொகை’, ‘கூத்தநூல்’, ‘திருக்குறள்’, 'காக்கை பாடினியம்’, ‘தொல் காப்பியம்' முதலான தமிழ்ச்சங்க நூல்களினின்று எடுக்கப் பட்டன வாகும். அகநானூற்றி லிருந்து எட்டுச் செய்யுட் களும், ஐங்குறுநூற்றிலிருந்துமூன்று செய்யுட்களும், நற்றிணை யிலிருந்து பன்னிரண்டு செய்யுட்களுங், கலித்தொகையிலிருந்து இரண்டு செய்யுட்களுங், கூத்த நூலிலிருந்து ஒரு செய்யுளுந், திருக்குறளிலிருந்து ஐந்து செய்யுட்களுங், காக்கை பாடினியத் திலிருந்து ஒரு சூத்திரமுந், தொல்காப்பியத் திலிருந்து முப்பத்திரண்டு சூத்திரங்களும், பெயர் தெரியாத ஏனைப் பல பண்டை நூல்களிலிலிருந்து நாற்பத்தாறு செய்யுட்களும் ஆக நூற்றிருபத்தெட்டுச் செய்யுட்கள் அவ்வரைப் பொருளை நன்கு விளக்குதற்கு மேற்கோள்களாக அவர் தம்மால் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இங்ஙனங் காட்டப் பட்ட இப் பழந்தமிழ்ப் பாக்களே உரைப் பொருளை மாணாக்கன் இனிது தெளிந்து கொள்ளுதற்குப் போதுமானவாம்; இவற்றின் வேறாக மேலும் பல செய்யுட்களை யெடுத்துக் காட்டுதல், வேண்டா கூறல் மிகைபடக்கூறல் கூறியதுகூறல் என்னுங் குற்றங்கட் கிடனாதல் அவ்வுரை மேற்கோள்களை நுணுகி யாராய்வார்க்குத் தெற்றென விளங்கும். இதற்குச் சான்றாக ஈண்டு ஒன்றெடுத்துக் காட்டுதும்: எழில்நலங் கிளர்ந்த ஒரு குமரிபாற் காதல் கைம்மிக்கு மெலிந்து வந்த தன் தலைமகனை நோக்கி அவன் பாங்கன் அவற்கு உற்றதுவினாவ “நெருநல் இவ் வகையார் ஒருவரைக் கண்டேற்கு என்னுள்ளம் பள்ளத்துவழி வெள்ளம்போல் ஓடி இவ்வகைத் தாயிற் றென்று சொல்லும்; அதற்குச் செய்யுள்; (3ஆஞ் சூத்திர உரை)

சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை

கான யானை அணங்கி யாஅங்கு

இளையள் முளைவாள் எயிற்றள்

6

வளையுடைக் கையள்ளம் அணங்கி யோளே

(குறுந்தொகை, 119)

ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/181&oldid=1590807" இலிருந்து மீள்விக்கப்பட்டது