உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3×

நு

க்

66

173

இதன்கட் போந்த உரைக்கு எடுத்துக்காட்டிய ய இச்செய்யுளும் மற்றொரு குறுந்தொகைச் செய்யுளும் உரையாசிரியன் கூறிய பொருளை விளக்குதற்குச் சாலுந் தன்மையவா யிருக்கின்றன. இவ்வா றிருப்பவும், மேற்காட்டிய குறுந்தொகைச் செய்யுட் பொருளையே கொண்ட "அளையா ரரவின் குருணை அணங்க” “அலைபார் கழன் மன்னர், “பொரு நெடுந்தானைப் புல்லார் தம்மை” என மேலும் மூன்று செய்யுட்கள் கூறியது கூறலாய் எடுத்துக் காட்டப்பட்டிருக் கின்றன. தாம் எடுத்துக்காட்டிய குறுந்தொகைப் பாக்களி னாலேயே இனிது விளங்கும் அப் பொருளுக்கு நக்கீரனார் மேலும் பல செய்யுட்களை யெடுத்துக் காட்டிக் கூறியது கூறல் மிகைபடக் கூறலென்னுங் குற்றங்களுட் படுவாரல்லர். ஆசிரியர் நக்கீரனார் இத்தகைய குற்றங்களுட் படும் நீரரல்லர் என்பது, அவர்மிக நுணுகி யாராய்ந் தெழுதும் இவ் வுரையில் ஒரு சொல்லாயினும் வேண்டா கூறலாய் நில்லாமல் எல்லாம் ஒன்றறோடொன்று தொடர்புற்று ஒன்றற்கொன்று ன்றியமையாதனவாய் நிற்றலை உற்றுநோக்குவார்க் கல்லாம் நன்குவிங்கும். இங்ஙனமே தாங்கூறும் உரைப் பொருள்கட்கு அவர் மேற்கோள்களாக எடுத்துக் காட்டிய தமிழ்ப்பாட்டின் பொருளையே நுதலும் பலப்பல கட்டளைக் கலித்துறைப் பாக்கள் ஆங்காங்கு வேண்டா கூறலாய்ச் செருகப்பட்டிருத்தலை ஆராய்ந்து காணவல்ல அறிவு மதுகை யுடையார், அக் கலித்துறைச் செய்யுட்களும் அங்ஙனமே D 'சிலப்பதிகாரங்’ கானல் வரியினின் றெடுத்துக் காட்டப்பட் டிருக்கும் ஏழு செய்யுட் களும் நக்கீரனாராற் காட்டப்பட் ஆகாமையினைத் தெற்றென அறிந்துகொள்வர்.மேலும், இக்கட்டளைக் கலித்துறைப்பா நக்கீரனார் இருந்த கி.பி. முதல் நூற்றாண்டில் வழங்கிய தூஉம் அன்று; அது முதன்முதல் வழங்கத் துவங்கிய தெல்லாங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரேயாம்; கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழந்தமிழ் நூல்களில் ஓரிடத்தாயினும் இக் கட்டளைக், கலித்துறைப் பாவினைக் காண்டல் இயலாது. ஆகவே வேண்டா கூறலாய் இவ் வுரையின்கட் போந்த கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் அத்துணையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/182&oldid=1590808" இலிருந்து மீள்விக்கப்பட்டது