உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

  • மறைமலையம் - 24

நக்கீரனார்க்குப் பல நூற்றாண்டுகள்

பிற்பட்டுவந்த ஒருபுலவராற் செய்து சேர்க்கப்பட்டனவாகுமே யல்லாது, நக்கீரனாரால் எடுத்துக் காட்டப்பட்டன ஆகாவென்று தேர்ந்து

கொள்க.

அற்றே லஃதாக, மாணிக்கவாசகப் பெருமான் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தனராயின், அவர் அருளிச்செய்த 'திருச்சிற்றம்பலக் கோவையா’ரில் அகப்பொருட்டுறைகளை விளக்குங் கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் மலிந்து கிடக்கவும், அவை தம்மை விடுத்து அவ் வகப் பொருட்டுறை களையே நுதலும் வேறு முந்நூற்றிருபத் தொன்பது கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களைப் புதியவாய்ப் படைத்து, அவற்றை அப் பின்வந்த புலவர் இவ் விறையனாரகப் பொருளுரையி னிடையிடையே செருகி விட்ட தென்னையெனிற் கூறுதும்: இக் கட்டளைக் கலித்துரைச் செய்யுட்கள் முந்நூற்றிருபத் தொன்பதிலும் புகழ்ந்து பாடப் பெறுவோன் ஆண்மை மிக்க ஒரு பாண்டிய வேந்தனே யாவன்; அவ்வேந்தன் பெயர்கள்: உசிதன், பராங்குசன், பஞ்சவன், பூழியன்மாறன், நெடுமாறன், அரிகேசரி, வரோதயன், விசாரிதன், அதிரியன், நேரியன், வானவன்மாறன், இரணாந்தகன், சத்துருதுரந்தரன், விசயசரிதன், கலிமதனன் முதலிய பலவாகச் சொல்லப்படு கின்றன. அவன் பாழி, விழிஞம், கோட்டாறு, ஆற்றுக்குடி, பூலந்தை, சேவூர், நறையாறு, கடையல்,நெல்வேலி, வல்லம், மணற்றிமங்கை வெண்மாத்து, களத்தூர், நாட்டாறு, நெடுங்களம், குளந்தை, சங்கமங்கை, வாட்டாறு மேற்கரை முதலான பத்தொன்பதூர் களில் நடந்த பெரும் போர்களிற் சேரமன்ன னொருவனை அடுத்தடுத்து வென்றமை இக்கலித் துறைச் செய்யுட்களிற் பலகாலும் உயர்த்துச் சொல்லப்படு கின்றது. இவ்வாற்றால் இப் பாண்டி வேந்தனுக்கும், அவன்காலத் திருந்த சேர மன்னனொருவனே பெரும் பகைவனா யிருந்தமை அறியப்படும். ஈதிங்ஙனமாகவுங், “கோடன் மலர்ந்து” என்னும் 323 ஆஞ் செய்யுளிற் ‘பொன்னி நாடன்' என்னும் ஒரு சொற்றொடர் காணப்படுதல் கொண்டு, அவன் காலத்துச் மன்னனொருவனையும் வன் வென்றானெனப் பொருள் பண்ணினாரும் உளர்.4

சோழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/183&oldid=1590809" இலிருந்து மீள்விக்கப்பட்டது