உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

175

“பாழிவென்ற

ஆடல் நெடுங்கொடித்தேர் அரிகேசரி அந்தண் பொன்னி நாடன் பகைபோல் மெலிகின்ற தென்செய்ய நன்னுதலே.

என அச் செய்யுளிற் போந்த அடிகள் ‘பாழியென்னும் ஊரிற் போர்க்களத்தே வெற்றிகொண்ட ஆடுதலையுடைய நீண்ட கொடி கட்டிய தேரினையுடைய அரிகேசரி எனவும், 'அழகிய குளிர்ந்த காவிரியினையுடைய நாட்டுக்குத் தலைவன் ‘எனவும், ‘அத்தகைய தலைவற்குப் பகையாயினார் மெலிவடைதல்போலச் செவ்விய நன்னுதலையுடைய இந்நங்கையும் மெலிவடை தலென்னை?' எனவும் பொருடருதலின், ‘அரிகேசரி' 'பொன்னி நாடன்' என்னும் இருபெயரும் ஓரரசன் மேலவாயே வருதல் வெள்ளிடை மலைபோல் விளங்கற்பாற்று. இச் செய்யுளிற் குறிப்பிடப் பட்ட பாண்டி மன்னன் தனது பாண்டி நாட்டுக்கே யன்றிச் சோழநாட்டுக்குந் தலைவனாயிருந் தனனென்னும் அத்துணையே இதன்கட் பெறப்படுகின்றதல்லாமல், இவன் சோழ மன்னனை வென்றானென்பதும் அதனாற் பெறப்பட வில்லை. சோழநாட்டுக்குந் தலைவனென்றமையானே அது பெறப்படுமாலெனின், அஞ்ஞான்றைச் சோழ மன்னற்கு அரசுக்குரிய புதல்வன் இல்லையாய்ப் புதல்வியொருத்தியே இருந்தனளாயின், அப் புதல்வியை மணந்துகொண்ட முறையால் அப் பாண்டிவேந்தன் சோழ நாட்டுக்குந் தலைவனாதல் கூடுமாகலின்,அந் நாட்டினுரிமை அவற்குச் சொல்லியதே கொண்டு அவன் சோழனை வென்றா னென்றல் பொருந்தாதென மறுக்க.

இனி, இப் பாண்டிவேந்தன் பெயர்கள் பலவற்றுள் 'நெடுமாறன்' என்பதும் ஒன்றாய்க் காணப்படுதலானும், இவன் 'நெல்வேலி'யிற் போர்புரிந்து பகைவரைத் தொலைத்தா னென்பது சொல்லப்படுதலானுந், திருஞான சம்பந்தப் பெருமான் காலத்தவனும் நெல்வேலிச் செருக் களத்தில் வந்தெதிர்ந்த வடபுல மன்னரைச் சாய்த்த வனுமாகிய 'நின்றசீர் நெடுமாற் பாண்டியனே' இறையனாரகப் பொருளுரையி னிடையிடையே செருகப்பட்ட கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களிற் குறிப்பிடப் பட்டவனாவ னென்று கொள்வாரும் உளர். அது பொருந்தாது நின்றசீர் நெடுமாறன் நெல்வேலிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/184&oldid=1590810" இலிருந்து மீள்விக்கப்பட்டது