உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறைமலையம் - 24

போர்க்களத்திற் சாய்த்தது வடக்கிருந்து படைதிரட்டி வந்த வடுகமன்னரையே யாம்; அஃது,

ஆயவர சளிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப் பாயபடைக் கடன்முடுகும் பரிமாவின் பெருவெள்ளங் காயுமதக் களிற்றினிரை பரப்பியமர் கடக்கின்றார்.

எனவும்,

இனையகடுஞ் சமர்விளைய இகலுழந்த பறந்தலையிற் பனைநெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குடைந்து முனையழிந்த வடபுலத்து முதன்மன்னர் படைசரியப் புனையுநறுந் தொடைவாகை பூழியர்வேம் புடன்புனைந்து.

(நின்றசீர் நெடுமாற நாயனார், 3, 7)

எனவும் போந்த பெரியபுராணச் செய்யுட்களால் நன்குணரப் படும். மற்று, இறையனாரகப் பொருளுரைக் கலித்துறைகளிற் சுட்டப்பட்ட பாண்டியனோ நெல்வேலிப் போர்க்களத்திற் றொலைத்தது இன்னாரையென்பது ன்னாரையென்பது சொல்லப்படவில்லை;

வாளா.

நீடிய பூந்தண் கழனி நெல்வேலி நிகர்மலைந்தார்

ஓடிய வாறுகண் டொண்சுடர் வைவே லுறைசெறித்த ஆடியல் யானை அரிகேசரி.

(22)

என்று பொதுப்படப் பகைவரை ஓட்டினானென்னு மளவே சொல்லப்பட்டிருக்கின்றது.நெல்வேலியில் அவனால் முறிவுண்ட பகைவர் பெயர் குறிக்கப்பட்டில தேனும், விழிஞம், கோட்டாறு, ஆற்றுக்குடி, பூலந்தை, சேவூர், நறையாறு, கடையல் முதலான போர்க்களங்களில் அவனாற் றொலைவுண்டோன் ஒரு சேரமன்னனே யென்பது அடுத்தடுத்து விளக்கமாய்ச் சொல்லப் படுதலின், நெல்வேலி முதலான ஏனைப் பறந்தலைகளிலும் அப் பாண்டியனாற் றோல்வியுற்றோன் ஒரு சேரமன்னனே யாவனன்றி வடபுலமன்னன் ஆகான். ஆகவே, நெல்வேலிப்போரில் வென்றான் என்னுங் குறிப்பு ஒன்றேகொண்டு, இறையனாரகப் பொருளுரைக் கலித்துறைப் பாக்களில் மொழியப்பட்டோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/185&oldid=1590811" இலிருந்து மீள்விக்கப்பட்டது