உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

177

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 'நின்றசீர் நெடுமாறனே' யென்றல் பெரிதும் பிழைபடுவதுடைத் தாம்.

இனிச், சின்னமனூரிலும் வேள்விக் குடியிலுங் கண்டெடுக்கப்பட்ட பட்டையங்களானே இந் நின்றசீர் நெடுமாற பாண்டியனுக்கு முன்னே ‘செழியன் சேந்தன் ‘மாறவர்மன் அவநி சூளாமணி', 'கடுங்கோன்' எனப் பெயரிய பாண்டிய அரசர் மூவர் அரசுபுரிந்தமை அறியக் கிடக்கின்றது. அம் மூவரில் நடுநின்ற 'அவநி சூளாமணி' என்னும் பாண்டியனுக்கும் 'மாறன்' என்னும் பயர் உண்மை தெளியப்படுதலானும் நடுக்காலத்துச் சமண் தமிழ்க் காப்பியங்களுள் மிகச்சிறந்ததாகிய சூளாமணி என்பது பாண்டிமன்னன் பெயரால் இவன்மகன் 'செழியன் சேந்தன்’ காலத்தில் ஆக்கப்பட்டதனை உற்றுநோக்குமிடத்து அவ்‘அவநி சூளாமணி மாறன்’ தமிழ்மொழிக்கண் மிக்க அன்புடையனாய் அதனை வளர்த்தலில் நிரம்பக் கருத்தூன்றி நின்றமை புலப்படுதலானும் 'இறையனாரகப் பொருளுரையின் இடையிடையே செருகப்பட்ட கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் அத்துணையும், அவனது தமிழ்ப் பற்றினையும் அவன்றன் பேராண்மையினையும் பாராட்டுதற்பொருட்டு அவனது அவைக்களத்துப் புலவரொருவராற் பாடப் பட்டமை துணியப்படும். இவ் அவநி சூளாமணி மாறன் காலத்திற் றமிழ்மொழி மதுரையில் மிகவுஞ் செழிப்புற் றிருந்த தென்பது. வண்டுறை வார்பொழில் சூழ்நறை யாற்றுமன் ஓடவைவேல் கொண்டுறை நீக்கிய தென்னவன் கூடற் கொழுந்தமிழின் ஒண்டுறை மேலுள்ளம் ஓடியதோ அன்றி யுற்றதுண்டோ தண்டுறை வாசிந்தை வாடிட என்நீ தளர்கின்றதே

என்னும் 23ஆங் கலித்துறைச் செய்யுளிற் கூறப்படுத லாலும், அவன் தமிழ்மொழி யுணர்ச்சியிலும் நிரம்பி யிருந்தா னென்பது, உரையுறை தீந்தமிழ் வேந்தனுசிதன்” (2), “பாவணை யின்றமிழ் வேந்தன் பராங்குசன்” (13),“ஆய்கின்ற தீந்தமிழ் வேந்த னரிகேசரி" (28), “அந் தீந்தமிழநர் கோமான்” (50), எனப் பலகாலும் அவன் அக் கலித்துறைச் செய்யுட்களிற் பாராட்டப்படுதலாலும் நன்கு தெளியப்படும். இவ் வவநி சூளாமணி மாறனுக்கும்,இவன்றன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/186&oldid=1590812" இலிருந்து மீள்விக்கப்பட்டது