உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

27. அப்பர் சம்பந்தர் இருந்தகால ஆராய்ச்சி

அற்றேலஃதாக, திருநாவுக்கரசு நாயனார் தாம் தழுவிய சமண்மதந் துறந்து சிவபெருமான் திருவருட்பேற்றினை எய்திய ஞான்று முதுமைமிக்கிருந்தா ரென்பதற்குச் சான்றென்னை யெனிற் கூறுதும்: திருநாவுக்கரசு நாயனார் சிவபிரான் திருவருளாற் சைவசமயத்திற்குத் திரும்பித் திருவதிகையிற் சூலைநோய் தீர்ந்துஅப் பெருமான் திருவடிக்கு ஆளானபிற் சில திங்களிலெல்லாஞ் சீர்காழிக்குப் போந்து திருஞானசம்பந்தப் பிள்ளையாரைக் கண்டு வணங்கி அவரொடு அளவளாவி யிருந்தனரென்பது ஆராய்ச்சியாற் புலானாகின்றது. இதனை நன்காய்ந்து பாராத 'தமிழ்வரலாறுடையார்” திருவதிகையில் ஆ கொள்ளப்பட்டபின் அப்பர் அவ்விடத்திலேயே முப்ப தாண்டுகள் இருந்தாராகல் வேண்டுமென்றும், அவர் மீண்டுஞ் சைவசமயத்தைத் தழுவியஞான்று நாற்பதாண்டின ரென்றும், அவர் சீர்காழியிற் போந்து திருஞானசம்பந்தப் பெருமானை வணங்கியபோதான் எழுபதாண்டுக்கு மேற்பட்டவரா யிருந்தா ரென்றும் உண்மைநிகழ்ச்சிக்கு முற்றும் முரணாகக் கூறினார் (தமிழ்வரலாறு பிற்பாகம், முற்பகுதி, 50 ஆம் பக்கம்) சேக்கிழாரடிகள் பெரிதாராய்ந்து பாடியிருக்கும் வரலாறு களைக் கருத்தாய் நோக்குவார்க்குத், தமிழ் வரலாறுடையார் கூறிய இவை முற்றும் மாறு கோளுரைகளாதல்விளங்கா நிற்கும். திருநாவுரக்கரசுகள் சமண்மதந் துறந்து சைவசமயம் புகுந்தமை தெரிந்த வளவானே சமண்மதத்தவர் வாளா இரார்; அவர் தம் அரசனை ஏவி அவரை நீற்றறையில் இடுவித்தன் முதலான பொல்லாங்குகளையெல்லாம் உடனே அவர்க்கு இழைத்தாராகல் வேண்டும். அப்பர் சிவபிரான் திருவருளைப் பெற்றதற்குப்பின் நெடுநாள் இடையீடின்றியே இத் தீங்குகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/232&oldid=1590861" இலிருந்து மீள்விக்கப்பட்டது