உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

  • மறைமலையம் - 24

திருஞானசம்பந்தரைத் தம்மினும் மிக உயர்த்துவைத்துப் பாடியிருத்தலானும், அக் குறிப்பறிந்து சேக்கிழாரும் பலவிடங்களிலும் ஞானசம்பந்தரை அப்பரினும் பார்க்க உயர்த்துக் கூறுதலோடு,

தொழுதணைவுற் றாண்டஅரசு அன்புருகத் தொண்டர்குழாத் திடையே சென்று பழுதில்பெருங் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தங் கரங்கள் பற்றி எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி விடையின்மேல் வருவார் தம்மை அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார்

என்று ஞானசம்பந்தர் தெய்வத்தலைமை யுடையராதலும் அப்பர் அவர்க்கு அடிமைத்திறம் பேணும் நிலையராதலும் விளங்கத் தேற்றுதலானும், நம்மாசிரியன்மார் தாமே அவ்வாறு அவர் தமக்குட் காட்டிய சிறப்பியல் வேற்றுமைக்கு மாறாக அவரெல் லாரையும் ஒருபடியராக வைத்துரைத்தல் பெரியதொரு குற்றமாமென்க.

1.

அடிக்குறிப்பு

திருநாவுக்கரசு நாயனார் புராணம். 185.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/231&oldid=1590860" இலிருந்து மீள்விக்கப்பட்டது