உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 மறைக்க வல்லாரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே

ஞ்

221

என்று திருவாய்மூர்ப்பதிகம் 8 ஆஞ் செய்யுளில் அருளிச் செய்திருத்தல் பெரிதும் நினைவிற் பதிக்கற்பாற்று. இன்னுந், திருவாவடுதுறையிற் சிவபெருமான் திருஞான சம்பந்தப் பிள்ளையார்க்கு ஆயிரம் பொன்முடிந்த கிழி யொன்று அருள்சுரந்து அளித்ததனை அப்பரே மனங்கசிந்து,

காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே

(திருவாவடுதுறைத் திருநேரிசை, 9)

என்று அருளிச் செய்தமையும் என்றும் நினைவுகூரற் பாலதாகும். இனி, இவ்விருவர்க்கும் பின்னேவந்து, அடியாரனை வர்க்குந் தாம் தனித்தனியே யடிமையாதலை மொழிந்து 'திருத்தொண்டத் தொகை' அருளிச்செய்த சுந்தர மூர்த்திகளும், வம்பறா வரிவண்டு மணநாற மலரும் மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

என்று திருஞானசம்பந்தப் பெருமானை மிக உயர்த்துக் கூறினாற்போல ஏனையடியாரைக் கூறிற்றிலர். இவ்வாறு திருஞானசம்பந்தர் காலத்திருந்த அடியார்முதல் இற்றை ஞான்றை வந்த இராமலிங்க அடிகள் ஈறான சான்றோ ரெல்லாரும் ஞானசம்பந்தப் பெருமானை ஏனை யெல்லாரினும் பார்க்க மிகுத்து வைத்தே வணக்கவுரை நிகழ்த்தக் காண்டலின், சமயாசிரியர் நால்வரில் ஞானசம்பந்தப் பெருமான் முன்வைத்து வழங்கப்பட்டது ஏனையாசிரியரிற் காணப்படாத தனிப்பெருஞ் சிறப்பு அவர்பாற் காணப்படுதல் காணப்படுதல் பற்றியேயாம்; இவ் வுண்மையினை மறைத்து, அப்பருக்குமுன் சம்பந்தர் இறைவன் திருவடிநீழல் எய்தினமை கொண்டே அவர் அப்பருக்குமுன் வைக்கப் பட்டாரெனக் கரைந்ததும், சம்பந்தரும் அப்பர் முதலான ஏனையடியாரும் ஒருங்கொத்த சிறப்பினரே யாவரெனப் பகுத்துணர்ந்து பாராது பகர்ந்ததுந் 'தமிழ் வரலாறுடையார்க்கு ஏதமாமென்க. அப்பரே தமது அருமைத் திருமொழியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/230&oldid=1590859" இலிருந்து மீள்விக்கப்பட்டது