உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

  • மறைமலையம் - 24

இறைவனருளே சமணிருள் பருகிய திருஞான சம்பந்தப் பிள்ளையாராவ ரெனவும், உலகெலாமீன்ற இறைவியினருளே தாண்டகச் செந்தமிழ் பயந்த திருநாவுக்கரசு நாயனாராவரெனவும் ஆசிரியர் சேக்கிழார் அவ்விருவர் தமக்குள்ளும் உள்ள சிறப்பில் வேற்றுமை காட்டுதலை உற்றுநோக்க வல்லார்க்கு, அருள் என்பது கடவுட்டன்மையாதல் போல் அதனோடொப்பிக்கப் பட்ட திருஞானசம்பந்தப் பிள்ளையாருந் தெய்வ அருள்மாட்சி யுடையராதலும், அன்பு என்பது அடியார்க்குரிய தன்மை யாதல் போல அதனோடொப்பிக்கப்பட்ட திருநாவுக்கரசு நாயனாரும் அடிமைத்திறத்தில் தலைநின்ற மாட்சியுடைய ராதலும் பிரிந்தினிதுவிளங்காநிற்கும். இங்ஙனமே இவ்வாசிரியன்மார் இருவரையுஞ் சேக்கிழார் ஒருங்குகூற நேர்ந்துழி யெல்லாம், அப்பரினும் பார்க்கத் திருஞானசம்பந்தப் பிள்ளையாரை மிக உயர்த்துவைத்து மொழிந்திருத்தலை ஆங்காங்கு நுணுகி யாராய்ந்துணர்ந்து கொள்க. இவ்வாறு சேக்கிழார் அவ்விருவரில் ஒருவரை ஏனையோரினும் மிகுத்துரைத்தல் கொண்டு, அவர் சம்பந்தரிடத்துப் போல அப்பரிடத்து மிக்க அன்பு வைத்திலரெனச் சொல்லுதல் ஒக்குமோ! அவர் அடியார்கள் அனைவரிடத்தும் பேரன்பு பூண்டொழுகுந் திறத்தின ரென்பது அவர் அவ்வவ்வடியார் அன்பின் றிறங்களைக் கல்லும்உருகப் பாடியிருக்குஞ் செந்தமிழ்ப் பாக்களால் இனிது புலனாகின்ற தன்றோ? இங்ஙனமாகச் சேக்கிழார் அடியாரெல்லாரிடத்தும் நெகிழாத பேரன்பினராயினும், அவ்வடியார் தமக்குள்ளுந் தனிப்பெருஞ் சிறப்புடையார் தலைமைப்பாட்டினையும் அவர் உண்மைவழாது ஆங்காங்கு நன்கெடுத்துக் காட்டும் முறை எம்மனோராற் பெரிதும் போற்றற்பால தொன்றாமென்பது.

இனித்,திருநாவுக்கரசு நாயனாரே தம்மினுந் திருஞான சம்பந்தப் பிள்ளையார் சிறந்தாராயிருத்தலை யெடுத்து மொழிந்து, அத்துணை மாட்சியுடைய அப் பிள்ளையார் தம்மோடு உடன்நிற்றலின் அவர் பொருட்டாகவாதல் றைவன் தனது திருவுருவினைத் தமது கட்புலனெதிரே காட்டியருளுதல் வேண்டுமெனக் குறையிரந்து,

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தா ரும்நின்றார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/229&oldid=1590858" இலிருந்து மீள்விக்கப்பட்டது