உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

219

தேற்றினாரல்லரோ? ஏனையாசிரியனும் ஓராசிரியரைச் சிறந்தெடுத்துவைக்கும் உண்மையாராய்ச்சியால், அவரவர்பால் அன்பு செலுத்துமுறை உண்மைவழிச் சென்று உறைத்து நிற்குமே யல்லாமல், அது பழுதுபடுதலும் ஏனையோரை யிழித்தலுமாய் முடியுமோ? காதல் வழிநிற்குங் கற்புடை மனையாள் ஒருத்தி தன் காதல் கணவனோடொப்ப ஏனை யுறவினர்பால் தலைப்பேரன்பு செலுத்தாமல் அவரவர்க்குத் தக்கவாறு அன்புபூண்டொழுகு வளாயின், அது கண்டார் அவளைப் புகழ்வரோ? இகழ்வரோ? எல்லாரும் அவளைப் புகழ்வதன்றே செய்குவர். அங்ஙனமே, நம் சமயாசிரியன்மார் எல்லாரையுங் குருட்டுத்தனமாய் ஒரே படியில் வைத்து அன்பு பாராட்டுதல் மெய்யன்புக்கு இழுக்காதல் உணர்ந்து, அவரவர்க்குரிய வகையில் வைத்து அவ்வவர்பால் உண்மையன்பு பூண்டொழுகுதலே சாலச்சிறந்ததா மென்று உணர்ந்து கொள்க.

வ்வாறு ஆசிரியன்மார்க்குள்ள சிறப்பு முறையினை உண்மையான் உணர்ந்து அம் முறையைக் கடைப்பிடித் தொழுகுவது எம்முயிர்க் குறுதி பயத்தல் பற்றியன்றே, முதன்முதல் திருநாவுக்கரசுநாயனார் சீர்காழியிற்போந்து திருஞானசம்பந்தப் பிள்ளையாரைக் கண்டு வணங்கி அவரோடும் அங்குள்ள திருக்கோயிலை வழிபடச் சென்றுழி அவ் விருவர்தந் தோற்றத்தினையுங் கூறப்புக்கவர் அவ்விருவர்க்குள்ள சிறப்பிலும் வேற்றுரை தோன்றத் தெரித்து, அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம் அன்புசெறி கடலுமா மெனவும் ஓங்கும்

பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற

புண்ணியக்கண்இரண்டெனவும் புவன முய்ய

இருட்கடுவுண் டவர் அருளும் அகில மெல்லாம் ஈன்றாள்தன் றிருவருளு மெனவுங் கூடித் தெருட்கலைஞா னக்கன்றும் அரசுஞ் சென்று

செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தா ரன்றே'

.

1

என்று அருளிச் செய்வாராயினர். இதன்கண் அருட்கட லாவார் திருஞானசம்பந்தப் பிள்ளையாரெனவும், அன்பின் கடலாவார் திருநாவுக்கரசு நாயனாரெனவும், இருட்கடு

வுண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/228&oldid=1590857" இலிருந்து மீள்விக்கப்பட்டது