உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

  • மறைமலையம் - 24

ஒரு

ஊட்டப்பெற்று எல்லாம் ஓதாதுணர்ந்த ஞானாசிரியராய் விளங்கினமை கண்டே அக்காலத்திருந்த சான்றோர் அவரை முன்னும் அப்பரை அவர்க்குப் பின்னுமாக வைத்து வழிபட்டு வரலானாரென்க. இவ்வுண்மையினை நன்காய்ந்துணர மாட்டாத ‘தமிழ் வரலாறுடையார்”, திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலில் அருளொளியில் கலந்தமை பற்றி முன்னும் அதற்குச் சிறிது காலங்கழிந்து இறைவன் றிருவடிப்பே றெய்தினமை பற்றி அப்பர் அவர்க்குப் பின்னுமாக வைத்து வழுத்தப் பட்டனரென்றார்; இவ்வாறுரைக்கின்றுழி இவர் இடையிடையே வழுப்பட மொழிந்தனவும் பல; காலத்தொருங்கிருந்த இருவரில் ஒருவர் முன்னும் மற்றவர் அவர்க்குப் பின்னுமாக இறைவன் திருவடிநீழல் அடைந் தமையினை ஓர் ஏதுவாகக் கொண்டு முன்னடைந்தவரை முன்னும் பின்னடைந்தவரைப் பின்னுமாக வைத்து வழங்கு தலை யாம் யாண்டுங் கேட்டிலேம். நூல்களிலாதல் ஆன்றோர் வழக்கிலாதல் அதற்குச் சான்றுங்கண்டிலேம் தமிழ் வரலாறுடையார்" ஒருவரே இவ்வாறு பொருந்தாவுரை நிகழ்த்தக் கண்டேம். சிறப்புடைய இருவரில் ஒருவரை முன்னும் ஏனையவரைப் பின்னுமாக வைப்பது, முன்வைக்கப்பட்டார் தனித்தலைமைச் சிறப்புக் கெழுமினராயிருத்தலும் மற்றையார் அது கெழுமாரா யிருத்தலும் பற்றியேயாம்; இதுவே தொன்று தொட்டு ஆன்றோர் நூல்வழக்கிலும் உலகவழக்கிலும் பிறழாது நடைபெறும் முறையாகும். இம்முறைக்கு மாறாகத் 'தமிழ்வரலா றுடையார்" சமயாசிரியர் தம்முள் ஒருவரை யுயர்த்துதலும் மற்றொருவரை அவரிற் றாழ்த்துதலும் அடாத செயலென் கின்றார்! ஏன் அடாதசெயலாம்? அவரவர்க்குள்ள சிறப்புகளை உள்ளவாறு ஆராய்ந்தளந்து மிக்க சிறப்புடையாரை மிக உயர்த்துதலும், அத்துணைச் சிறப்பு வாயாதாரை அவர்க்கு அடுத்த நிலையில் வைத்து வழுத்துதலுங் குற்றமாமாறு யாங்ஙனம்? தெய்வத் திருவள்ளுவரும்,

பொதுநோக்கான் வேந்தன் வரிசையால் நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்

என்று பொதுநோக்கே குற்றமுடைத்தாதலும், அவரவர்க்குரிய வரிசைக்குத்தக்க சிறப்புநோக்கே விழுப்பமுடைத்தாதலும் நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/227&oldid=1590856" இலிருந்து மீள்விக்கப்பட்டது