உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

217

ஓதுதலை உற்றுக்காணுமிடத்து, அவர் காலத்திற்கு முன்னெல்லாம் அம் முதன் மூவருமே சைவசமய ஆசிரியராய்க் கொள்ளப்பட்டனரென்பதும், அவரது காலத்திலேதான் மாணிக்கவாசகரும் அம் மூவரோடு நாலாமவராக வைத்துச் சைவ நன்மக்க ளெல்லாராலும் வழுத்தப்படலாயினா ரென்பதும் நன்குவிளங்காநிற்கும்.

ஈதிங்ஙனமாகவுந்,

'தமிழ்வரலாறு உடை

யார்,

சைவசமயாசிரியர் மூவருங் காலத்தான் முற்பட்டவராதல் பற்றி அம்மூவரையும் ஒரு தொகையாக்கி முன்னும், மாணிக்கவாசகர் அம் மூவர்க்கும் பிற்பட்டவராதல்பற்றி அவரைப் பின்னுமாக வைத்துச் சைவசமயச் சான்றோர்கள் வழங்குவாராயினரெனக் கூறினார். கால முற்பிற்பாடு பற்றி மூவர் முன்னும் மாணிக்க வாசகர் பின்னுமாக வைக்கப் பட்டது உண்மையாயின், மூவர் காலத்திற்கும் முன்னிருந்தோரான 'திருமூல நாயனாரை’யும் அவர் அருளிச்செய்த ‘திருமந்திர’ நூலையும் அம் மூவர்க்கும் அவர் அருளிச் செய்த 'தேவாரத் திருமுறைக'ளுக்கும் முன்னரன்றோ வைத்து வழங்கல் வேண்டும்? அற்றன்று, திருமூலநாயனார் காலத்தால் முற்பட்டவரேனுங், கடவுளுண்மையை மறுத்த பௌத்தஞ் சமணம் முதலான புறச்சமயங்களை வழக்கில் வென்று சிவபிரானே முழுமுதற் கடவுளாதலைப் பல வியத்தகு தெய்வ நிகழ்ச்சிகளால் நிலைநிறுத்திய நால்வரைப் போல் திருமூலர் சைவவுண்மையினை நாட்டினவரல்ல ராகலின், அவர் அவர்க்குமுன் வைக்கப்பட்டில ரெனின்; இதுவும் எமது கொள்கைக்கே துணை செய்வதாகும்; என்னை? சமயாசிரியர் நால்வரின் வைப்புமுறை அவரவர் சிறப்புப்பற்றியே வைக்கப்பட்டதல்லாமல் அவர்தங் கால முற்பிற்பாடு பற்றியன்றென்பதே எமது கோட்பாடாக லானும், நீர் எழுப்பிய வினாவும் அக்கோட்பாட்டையே நுதலுதலானு மன்பது. மேலுந், திருநாவுக்கரசு நாயனார் காலத்தால் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு முற்பட்டவராயிருந்தும், அவர் அறிவு முதிர்ந்த முதுமைக் காலத்துஞ் சமண்சமயக் கோட்பாட்டின் பொருந்தாமை யுணராராய் அதன்கண் அழுந்திநிற்ப, ஞான சம்பந்தப் பெருமானோ பால்பருகுங் குதலைச் சவ்வாய்க் குழவி யாயிருந்த ஞான்றே அம்மையப்பரை நேரே கண்டு அவரால் ஞானப்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/226&oldid=1590855" இலிருந்து மீள்விக்கப்பட்டது