உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் - 24

கோத்தாராகல் வேண்டும். இதற்கு, நம்பிகள் அருளிய 'திருத்தொண்டர் திருவந்தாதி'யின் துவக்கத்தில், நம்பிகளின் திருவடித் துணையைவேண்டிப் பாடியிருக்கும்,

பொன்னி வடகரை சேர்நாரை யூரிற் புழைக்கைமுக மன்னன் அறுபத்து மூவர் பதிதே மரபுசெயல்

பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும் அந் தாதிதனைச் சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே

இன்னாரென்பதும்

என்னுஞ் செய்யுளே சான்றாம். இச்செய்யுளை இயற்றினவர் இன்னகாலத் திருந்தாரென்பதுங் குறிக்கப்படாவிடினும், இச் செய்யுளிற் போந்த பொல்லாப் பிள்ளையார் கதையுந் ‘திருமுறைகண்ட புராணத்'திலுள்ள பொல்லாப்பிள்ளையார் கதையும் ஒத்திருத்தலின், அத்திருமுறை கண்டபுராணம் இயற்றிய உமாபதி சிவாசாரியாரென்பாரே இச் செய்யுளையும் இயற்றிச் சேர்த்துத், திருத்தொண்டர் திருவந்தாதி'யையும் நம்பிகள் அருளிச்செய்த ஏனை நூல்களையும் பதினோராந் திருமுறையின் ஈற்றிற் கோத்தவரா யிருக்கலாமென்று கோடல் இழுக்காது.இங்ஙனம் நம்பிகளுக்குப் பின்வந்த ஓர் அன்பராற், பதினோராந் திருமுறையின் ஈற்றில் நிறுத்தப்பட்ட நம்பிகளின் நூல்களைத்தவிர, ஏனைப் பெரியார்தம் நூல்களெல்லாந் ‘திருமுறைகண்ட புராணங் கூறுமாறு நம்பிகளாலேயே கோக்கப்பட்டன வென்பது உண்மை யாயின், அங்ஙனங் கோக்கப்பட்ட நூல்களுள் ஒன்றான திருவிடைமருதூர் மும்மணிக்கோவை'யும் அதனாசிரியரான பட்டினத்தடிகளும் நம்பியாண்டார் நம்பிகளிருந்த கி.பி.பத்தாம் நூற்றாண்டின் இறுதிக்கு முற்பட்டிருத்தமை பெறப்படும். பட்டினத்தடிகள் தாம் அருளிச்செய்த அத் 'திருவிடை மருதூர் மும்மணிக்கோவை’யில்.

வித்தகப் பாடல் முத்திறத் தடியருந்

திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்

(28)

என்று திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் என்னும் மூவரையும் மாணிக்கவாசகரையும் ஒருங்கு சேர்த்து ஓதியிருக்கின்றார்.முதன் மூவரை ஒரு தொகையாக்கி முன்னும், முன்னும், மாணிக்கவாசக ரொருவரை மட்டும் அம்மூவர்க்குப் பின்னுமாகவைத்து அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/225&oldid=1590854" இலிருந்து மீள்விக்கப்பட்டது