உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

215

முதலாசிரியராய்க் கொண்டு அவரையும் அவர் அருளிய தமிழ்மறைகளையுந் தம் உயிர்போற் கொண்டு வழிபாடுசெய்து வருவாராயினர். இவ்வாறு, வடக்கிருந்துவந்து குடியேறிய வீரசைவமரபினரால் முதலாசிரியராய் வைத்து மாணிக்க

வாசகப்

பருமான் வழுத்தப்படுதல் பற்றியே, தமிழ்நாட்டிலிருந்த சைவசமயச் சான்றோர்கள் நெடுங்காலம் வரையில் அவரைத் தமது சைவசமய குரவர் வரிசையில் வைத்துக் கொண்டாடிற்றிலர். இதனாலேதான் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரது திருப்பெயரை விளங்கக்கூறாது பொய்யடிமையில்லாத புலவர்”எனச் சிறிது மறைத்து குறிப்பாற் கூறினாராதல் வேண்டும். சுந்தரமூர்த்தி சிறிது பின்னேயெல்லாம்

நாயனாரதுகாலத்திற்குச் வடக்கிருந்துவந்த வீரசைவத்திற்கும் இந்நாட்டிலுள்ள சித்தாந்த சைவத்திற்கும் முன்னிருந்த வேற்றுமையுணர்ச்சி மறைய, அவ்விரண்டிற்கும் உரியார் ஒருவரோடொருவர் ஒருங்கு அளவளாவி இருவர் கொண்ட சமயமும் ஒருசமயமேயென உண்மை கண்டு உறவுகலந் தமையின், மெல்லமெல்ல மாணிக்கவாசகரையும் நாலாஞ் சைவசமயாசிரியராக இங்குள்ளா ரெல்லாரும் ஒருப்பட்டுக் கொள்ளும் பெரும்பேறு பெறலாயினாரென்க. சுந்தர மூர்த்திநாயனார் காலத்தும் அவர்க்கு முற்பட்ட காலத்தும் இங்கிருந்த சைவசமயப் பெரியார் மாணிக்கவாசகப் பெருமானை அவ்வாறு சைவசமய ஆசிரியராய்க் கொண்டிலர்; அல்லதவ்வாறு கொண்டன ரென்பதற்குச் சான்றும் இன்று. சுந்தரமூர்த்திகளுக்குப்பின் பட்டினத்தடிகள் அருளிச்செய்த 'திருவிடைமருதூர் மும்மணிக் கோவை'யிலே தான் (28) முதன்முதல் மாணிக்கவாசகப் பருமான் ஏனை மூவரொடு சேர்த்து நாலாமவராகச் சொல்லப்பட்டிருக்கின்றார். இந் நூலுடன் ‘பதினோராந் திருமுறை'யிற் சேர்க்கப் பட்டிருக்கும் ஏனை அருள்நூல் வரிசையில் நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்திருக்கும் நூல்களும்இறுதியில் நிறுத்தப்பட்டிருக் கின்றன. நம்பிகள் தாமியற்றிய நூல்களைத் தாமே ஏனைப்பெரியார் தம் நூல் வரிசையிற் சேர்த்திரார் என்பது திண்ணம். நம்பிகள் காலத்திற்குப்பின் அவர்பால் மெய்யன்பு பூண்டொழுகிய மற்றொருவரே நம்பிகளின் நூல்களை அவற்றோ டுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/224&oldid=1590853" இலிருந்து மீள்விக்கப்பட்டது