உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

  • மறைமலையம் - 24

ஆ யினுந், தமக்குமுன் வழிநூல் செய்த நம்பியாண்டார் நம்பிகள் அதற்குப் பொருந்தாப் பொருள் கொண்டமையானும், அவரொடு மாறுகொண்டு அதற்குத் தாங்கொண்ட தனியடியார் என்னும் பொருளை ள வெளிப்படையாக நாட்டுதலிற் சேக்கிழார்க்குக் கருத்தொருப்பா டில்லாமை யானும் அவர் அதனை வெளிப்படச் சொல்லாது நெகிழ்ந்தோதி விடலானா ரென்க. அல்லதூஉம், மாணிக்க வாசகப் பெருமானையும் அவர் அருளிச்செய்த ‘திருவாசகம்', 'திருச்சிற்றம்பலக் கோவையார்” என்னும் நூல்களையும் ஞ்ஞான்று ஆங்காங்குள்ள வீரசைவர் களும், வீரசைவமடங் களின் குரவர்களும், சைவசமயாசிரியர் ஏனை மூவரினும் அவர் அருளிச்செய்த 'தேவாரமறை'களினும் பார்க்க மிகுத்துக் கொண்டாடி வழிபாடாற்றி வருதலை உற்றாராயுமிடத்து, இவ்வழக்கந் தொன்றுதொட்டு வருவ தொன்றென்பது புலனாகாநிற்கும். வீரசைவமானது சைவ சமயத்தின் வேறல்லாததாய்ச் சிவலிங்க வழிபாட்டில் மிக உறைத்து நிற்பதொன்றே யாயினும், அஃது இத்தமிழ் நாட்டிற்கு உரியதல்லாததாய்க், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் வடக்கிருந்து தமிழ்நாட்டிற் குடிபுகுந்த வடுகக்கருநாடராற் கொணரப்பட்டதாகலின், இங்கிருந்த சைவசமயச் சான்றோர் அதனைத் தமது சமயத்தின் வேறுபட்ட தொன்றாகவே கொண்டொழுகலாயினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றில் வடுகநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற் குடிபுகுந்து வைகிய வீரசைவ மரபினர் பலருட், பாண்டி நாட்டில் வைகிய ஒரு தெய்வப் பார்ப்பனக் குடியிலிருந்து மாணிக்கவாசகப் பெருமான் தோன்றினமையாற் போலுந் சிவபெருமானால் நேரே ஆட்கொள்ளப் பட்டுச் சிவமாய் வயங்கிய அப் பெருமான், கடவுள் இல்லையென மறுத்து நாத்திகம் பேசிய இலங்கைப் பெளத்தர்களை நடுநிலை வழாமல் வழக்கில் வென்றுந், திருவாசகந் திருக்கோவையா ரென்னுஞ் செழுந்தமிழ் மறைத்தேனைத் தம் அருண் மணவாய்மலர் விண்டு அருளியுந், தில்லைச் சிற்றம்பலத்தே தோன்றிய சிவவொளியில் இரண்டறக் கலந்து சிவமாகியுந் தெய்வச் சைவசமயா சிரியராய் வீறித்திகழ்ந்தமை கண்டு, அவரைத் தமது மரபிற் பிறப்பித்துக் கொள்ளும் பெருந்தவம் ஆற்றிய வீரசைவச் சான்றோர்கள் அவரைத்

தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/223&oldid=1590852" இலிருந்து மீள்விக்கப்பட்டது