உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

225

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் சேக்கிழாரடிகள் தெளித்துக் கூறுமாற்றால், அப்பர் முன்னும் பின்னுந் திருவதிகையிற் பலவாண்டுகள் வைகினா ரல்லரென்பது இனிது பெறப்படும். ஈதிங்ஙனமாகவும், இவ்வுண்மை

வரலாற்றுக்கு முழுமாறாய்த் 'தமிழ் வராறுடையார் முப்பதாண்டுகள் அப்பர் திருவதிகையில் வைகினாரெனத் துணிபுரை நிகழ்த்தியது பெரியதொரு பொய்யுரையாமென விடுக்க.

இனி, மேற்காட்டிய வாறெல்லாம்அப்பர் சமண்மதந் துறந்து திருவதிகையிற் சைவசமயம் புகுந்து, சமண்மதத்த வரால் அளவின்றித் துன்புறுத்தப்பட்டுத், திருவருளால் அவற்றிற் கெல்லாந் தப்பி மீண்டுந் திருவதிகை சென்று இறைவனை வணங்கிச் சிலநாளங்கிருந்து, பின்னர்ச் சிவபிரான் திருக்கோயில் கடோறும் வணங்கப் புறப்பட்ட வரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகட் கெல்லாம் எவ்வளவு காலஞ் சென்றதாகல் வேண்டுமென்று சிறிதமைந்து ஆய்ந்து காணவல்லார்க்கு, அது சற்றேறக் குறையப் பன்னிரண்டு திங்கள் அல்லது ஓராண்டுக் குள்ளாகவே தான் இருக்கலாமென்பது நன்கு விளங்காநிற்கும்.

இனித், திருநாவுக்கரசு நாயனார் திருவதிகையினின்றும் புறப்பட்டுத் 'திருத்தூங்கானைமாடம்’, 'திருவரத்துறை’, ‘திருமுதுகுன்றம்’, ‘திருத்தில்லை', 'திருவேட்களம்’, ‘திருக்கழிப் பாலை' முதலான திருக்கோயில்கட்குச் சென்று ஆங்காங்கு றைவனைப் பரவிப்பாடிச் சிற்சில நாள் தங்கி, மீண்டுந் தில்லைமாநகர்க்குப்போந்து ஆண்டுத் திருப்பணிசெய் தமரும்நாளில், மூன்றாட்டைச் சிறுமதலையாகிய திருஞான சம்பந்தர் சீர்காழியிலே இறைவனையும் இறை வியையும் நேரே கண்டு அவரால் ஞானப்பால் ஊட்டப் பெற்று எல்லாம் ஓதாதுணர்ந்த எல்லாம்வல்ல ஞானா சிரியராய் எழுந்தருளி யிருக்கின்றார் என்னும் வியப்பான செய்தியை அடியார்கள் உரைப்பக்கேட்ட திருநாவுக்கரசர் அளவுபடா வியப்பு அவரைக் காணுங் காதலுந் தமதுள்ளத்தைக் கவர்ந்து கொள்ள, உடனே தில்லையை வணங்கிப் புறப்பட்டு, வழியிலே திருநாரையூரைப் பணிந்து பாடிப், பின் சீர்காழிமருங்கு சார்ந்தார். இவ்வாறு இவர் வருதலைக் கேட்ட திருஞானசம்பந்தப் பிள்ளையார் தாமும் அதற்காகப் பெருமகிழ்வுற்று,அவரை எதிர்கொளச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/234&oldid=1590864" இலிருந்து மீள்விக்கப்பட்டது