உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

செல்லும்

  • மறைமலையம் - 24

பொழுதில், எதிர்வருந்

தோற்றத்தைச் சேக்கிழாரடிகள்,

திருநாவுக்கரசரின்

சிந்தைஇடை யறா அன்புந் திருமேனி தனில் அசைவுங் கந்தமிகை யாங்கருத்துங் கையுழவா ரப்படையும் வந்திழிகண் ணீர்மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசும்எதிர் வந்தணைய

1

என்று விளக்கிச் சொல்லியிருக்கின்றார். பிள்ளையாரைக் காணவந்த காலத்தில் திருநாவுக்கரசுகள் ஆண்டில் மிக முதியரா யிருந்தனரென்பது, மேலைச்செய்யுளிற் போந்த 'திருமேனி தன்னில் அசைவும்" என்னும் சொற்றொடரால் நன்கு அறிவுறுத்தப்படுதல் காண்க. எழுபது ஆண்டுக்கு மேற்பட்டார் ஒருவர் நடக்கும் பொழுதுதான் அவரதுடம்பு தள்ளாடுதலை உலகவழக்கில் எவரும் நன்குணர்வர். ஆகவே, அரசுகள் பிள்ளையாரைக் காணவந்த காலத்தில் எழுபது ஆண்டுக்கு மேற்பட்ட முதுமையுடையரா யிருந்தன ரென்பதூஉம், அதுபற்றியே பிள்ளையார் அவரை ‘அப்பரே” என்றழைத்தன ரென்பதூஉம் இனிது விளங்கா நிற்கும். அரசுகள் சமண்மதந் துறந்துசிவபிரான் திருவருளைப் பெற்று, அதனாற் சமண் வேந்தனாற் பலவாறு துன்புறுத்தப் பட்டுச், சிவபிரானருளால் அவற்றிற்கெல்லாந் தப்பி, மீண்டுந், திருவதிகை புகுந்தவரையிற் சன்றகாலம் ஓராண்டின் அகமேயாமெனவும், அதன்பிற் றிருவதிகையி னின்றும் புறப்பட்டுச் சில திருக்கோயில்களை வணங்கிக் கொண்டு அவர் திருஞானசம்பந்தப் பிள்ளையாரைக் காணவந்தவரையிற் சென்ற காலமும் ஓராண்டிற்குள்ளே யாகுமெனவுங் கோடலே சேக்கிழார் கூறும் வரலாற்று ரைக்கும் அறிவு வழக்குக்கும் ஒத்ததாக இருத்தலின், பிள்ளையார்பால் வந்தபோது அரசுகள் எழுபத்தைந்தாண்டு சென்ற முதியராயிருந் தாராதலும், அமண் மதப்பற்று விட்டுத் திருவதிகையில் அவர் இறைவன் றிருவருட்பேற்றிற் குரியரானபோது எழுபத்து மூன்றாண்டினரா யிருந்தா ராதலுந் தெற்றெனப் பெறப்படும்.

இவ்வுண்மை திருநாவுக் கரசு நாயனாரே தாம்

திருவதிகையிலிருந்து திருவாய் மலர்ந்தருளிய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/235&oldid=1590865" இலிருந்து மீள்விக்கப்பட்டது