உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 * முன்பெலாம் இளையகாலம் மூர்த்தியை நினையாதோடிக் கண்கண இருமிநாளுங் கருத்தழிந் தருத்தமின்றிப் பின்பக லுணங்கலட்டும் பேதைமார் போன்றென்உள்ளம் அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீ ரட்டனீரே

227

என்னுந் திருப்பாட்டாலும் நன்று வலியுறுத்தப்படும். இதன்கட் டாம் இளமைக் காலமெல்லாஞ் மல்லாஞ் சமண் மதத்திலிருந்து கழித்தமையுங், கண்கணென்று இருமி நினைவு கலைந்து துன்புறும் முதுமைக்காலத்தே தாம் அச் சமண் மதம் விட்டுச் சிவபிரான் திருவருளைப் பெற்றமையும் அவரே விளங்கக்கூறுதல் காண்க.

மேலுந், திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்திருக்கும் திருப்பதிகத் ெ தாகையினையுந், திருஞான சம்பந்தப் பிள்ளையார் அருளிச்செய்திருக்குந் திருப்பதிகத் தொகை யினையும் ஒப்பிட்டுக் காண்புழி, அரசுகள் சமண் மதந்துறந்து சிவபிரான் திருவருளைப் பெற்றபின் பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளில் இவ்வுலக வாழ்வு நீத்து இறைவன் திருவருளொளியில் இரண்டறக்கலந்தமை நன்கு தெளியப்படும். திருநாவுக்கரசர் அருளிச்செய்த திருப்பதிகத் தொகை நாலாயிரத்துத் தொளாயிரமே யாதலை, மேலே சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருப்பாட்டொன் நம்பியாண்டார் நம்பிகள் பாடியருளிய செய்யுளொன்றானும் னிது விளக்கிக் காட்டினேம். மற்றுத், திருஞானசம்பந்தப் பெருமானோ பதினாறாயிரந் திருப்பதிகங்கள் அருளிச்செய்தன ரென்பது,

நகரங் கெடப்பண்டு திண்டேர் மிசைநின்று நான்மறைகள் பகரங் கழலவ னைப்பதி னாறாயிரம்பதிகம்

மகரங் கிளர்கடல் வையந் துயர்கெட வாய்மொழிந்த

நிகரெங் கிலிகலிக் காழிப்பிரா னென்பர் நீணிலத்தே

றானும்

என்று ‘திருஞானசம்பந்தர் திருவந்தாதி”15 ஆஞ் செய்யுளிலும்,

பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்

மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/236&oldid=1590866" இலிருந்து மீள்விக்கப்பட்டது