உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

என்று

மறைமலையம் - 24

திருஞானசம்பந்தர் திருவுலாமாலை'யிலும் நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்திருக்குமாற்றால் ஐயுறவுக்கு இடனின்றித் துணியப்படும். பிள்ளையார் மூன்றாம் ஆண்டில் இறைவன் றிருவருளை நிறையப் பெற்றுத், தாம் திருமணங் கூடியநாளில் பிள்ளையார் திருமணங்கூடிய காலத்திற் பதினெட்டு அல்லது இருபதாண்டு நிரம்பப்பெற் றிருந்தா ரென்று கோடல் இழுக்காகாது; என்னை? பதினா றாண்டுக்குமேல் இருபதாண்டுக்குள் ஓர் இளைஞனுக்கு மணஞ்செய்து வைத்தலே பண்டைத் தமிழ்மக்கள் முறையாய்ப் போதரக் காண்டலின். ஆகவே, அருள்பெற்ற காலம் முதல் இறைவன் றிருவடி நீழலெய்திய காலம் வரையில் அஃதாவது சிறிதேறக்குறையப் பதினைந்தாண்டு களில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இந்நிலவுகின்மீ தெழுந்தருளியிருந்து அருளிச் செய்த திருப்பதிகத்தொகை பதினாறாயிரம் ஆகின்றது. பிள்ளையார் பதினாறாயிரம் பதிகங்கள் அருளிச்செய்தற்குப் பதினைந்தாண்டுகள் சென்றனவாயின், திருநாவுக்கரசுகள் நாலாயிரத்துத் தொளாயிரம் பதிகங்கள் அருளிச் செய்தற்கு ஏழு அல்லது எட்டு ஆண்டுகளே தாம் சென்றனவாதல் வேண்டும். வடக்கே திருக்கைலாயம் வணங்கச் சென்றபோது அரசுகள் இடையே பாடாதிருந்தார் போலும்! மற்றுத், 'தமிழ் வரலாறுடை யாரோ? அப்பர் நாற்பதாமாண்டிலேயே அருள்பெற்றுப் பின்னும் நாற்பதாண்டுகள் இந் நிலவுலகின்மீது எழுந்தருளி யிருந்தன ரென்றார். அருள் பெற்றபின் அவ்வாறு அவர் நாற்பதாண்டுகள் இங்கிருந்தனராயிற் சிறிதேறக்குறைய முப்பதினாயிரந் திருப்பதிகங்களாவது அவர் அருளிச் செய்திருத்தல் வேண்டுமன்றோ? அங்ஙனமின்றி அவர் நாலாயிரத்துத் தொளாயிரம் பதிகங்களே அருளிச் செய்திருக்கக் காண்டலால், அருள்பெற்றபின் அவர் அத்துணை நீண்ட காலம் இங்கிருந்தாரென்றல் சிறிதும் உண்மையாகாது.எழுபதாண்டுக்கு மேல் அருள்பெற்று எண்பதாம் ஆண்டளவில் அவர் சிவபிரான் திருவருளொளியிற் கலந்தன ரென்னும் உண்மை முடிபினையே அவர் அருளிச்செய்த திருப்பதிகத்தொகை நாட்டுவதாகுமென்று கடைப்பிடிக்க. எனவே, திருநாவுக்கரசு நாயனார் தமது நாற்பதாம் ஆண்டில் அருள்பெற்றாரென்னும் உரை பொருத்தமில்லாததா மென்பதூஉம், அவரருளிச்செய்த திருப்பதிகத்தொகைக்கு எட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/237&oldid=1590867" இலிருந்து மீள்விக்கப்பட்டது