உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

ஆண்டுகளும் வடநாடு

சென்று

3

229

மீண்டமைக்கு

இரண்டாண்டுகளுங் கூட்ட அரசுகள் அருள் பெற்றபின் இந் நிலவுலகின்மீ தெழுந்தருளி யிருந்தகாலம் பத்தாண்டுகள் அல்லது மிகுதியாய்ச் சொன்னாற் பன்னிரண்டு ஆண்டுகளே யாமென்பதூஉம், அவ்வாற்றால் அவர் தமது எழுபத்து மூன்றாம் ஆண்டில் அருள்பெற்று எண்பத்தைந்தாம் ஆண்டில் இறைவன் திருவடி நீழலை எய்தினாராகல் வேண்டுமென்பதூஉந் தாமே போதருமென்க.

உண்மை

2

மேலும், பழைய கல்வெட்டுகளின் ஆராய்ச்சியால் இஞ்ஞான்று புலனாயிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளுக்கும் யாம் மேலே காட்டியவைகளே பொருத்தமா யிருத்தலையும் ஒருசிறிது காட்டுவாம்: திருநாவுக்கரசு நாயனார் சமண்மதத்திலிருந்து சைவசமயத்திற்குத் திரும்பிய காலையில் அவரைப் பலவாற்றால் துன்புறுத்தினவனுந், தான்செய்த துன்பங்கள் அத்தனையும் அவரைச் சிறிதும் ஊறுபடுத்த மாட்டா தொழிந்தமை அவர் சிவபெருமான் றிருவருட் பாதுகாப்பில் நின்றமையாற்றான் என்பதனைத் தெளிய வுணர்ந்த பின்னர் அவரது அருளாற் சிவபிரான் றிருவடிக்கு ஆளானவனும் 'முதலாம் மகேந்திர வர்ம பல்லவனே" என்பது இஞ்ஞான்று துணியப்பட்டுக் கிடக்கின்றது. இவ்வேந்தன் கி.பி.600 ஆம் ஆண்டிலிருந்து 625 ஆம் ஆண்டுவரையில் அரசுபுரிந்தா னன்பதும், வரலாற்று நூலாசிரியராற் றுணியப்பட்ட தொன்றாம். இவ்வேந்தன் 'மத்தவிலாசம்" எனப்பெயரிய நகைச்சுவை நாடகம் ஒன்றை வடமொழியில் ஆக்கி, அதிற்பாசுபத மதத்தினராகிய துறவியொருவரையும், ஒரு காபாலிகரரையும் அவர் தம் மனைவியாரையும், ஒரு பௌத்த பிக்குவையும் உரையாடவிட்டு, அவர் தம்மை யெல்லாம் ஏளனஞ் செய்திருக்கின்றான்.3 இதனால் இவன் இந் நாடகம் ஆக்கிய காலத்திற் சமண் மதத்தவனாயிருந்தமை பெறப்படும். இவன் அரசாண்ட இருபத்தைந் தாண்டுகளின் இறுதிப் பகுதியிலேதான், அப்பரின் அருட்பேராற்றலுஞ் சிவபிரானே முழுமுதற் கடவுளாதலுந் தெளிந்து அவரது திருவருளாற் சைவசமயத்தைத் தழுவினான். அவ்வாறு சைவசமயத்தைத் தழுவியுடனே, தென்னார்க்காடு

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/238&oldid=1590868" இலிருந்து மீள்விக்கப்பட்டது