உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 நீலநக் கடிகளும் நிகழ்சிறுத் தொண்டரும்

உடனணைந் தெய்து நீர்மைச் சீலமெய்த் தவர்களுங் கூடவே கும்பிடுஞ் செய்கைநேர் நின்று வாய்மைச்

சால்பின்மிக் குயர்திருத் தொண்டினுண் மைத்திறந் தன்னையே தெளிய நாடிக்

காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந் தருளினார் காழி நாடர்6

231

என்று சேக்கிழார் கூறுமாற்றான் அறியப்படும். இந்நிகழ்ச்சிக்குச் சில திங்கள் முன்னே திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளிய போதுஞ், சிறுத்தொண்டர் தம் அருமைப் புதல்வர் சீராளருடன் சம்பந்தப்பெருமானை வரவேற்று வணங்கினமை,

கூராரல் இரைதேர்ந்த குளமுலவி வயல்வாழும் தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய

பேராளன் பெருமான்றன் அருளொருநாட் பெறலாமே

என்று திருஞானசம்பந்தப் பெருமானே திருச்செங் காட்டங்குடித் திருப்பதிகத்தில் அருளிச் செய்தவாற்றால் தெளியப்படும். ங்ஙனமாகச் சீராளருடன் சிறுத்தொண்ட ரோடும் அளவளாவிப், பின்னர்ச் சில திருக்கோயில்களை வணங்கிக் காண்டு பிள்ளையார் அப்பருடன் திருமறைக் காடு வந்து சேர்ந்து, அங்குள்ள திருக்கோயிலின் முன்வாயிற் கதவுகள் எவரானுந் திறக்கக்கூடாவாறு அடைபட்டு நிற்ப, அவற்றைத் திறக்கவும் அடைக்கவுஞ் செய்து, அம்மையப்பரை

வணங்கியபடியாய் அங்கே சிலநாட்கள் வைகியிருப் புழி, மதுரையிற் பாண்டிமன்னன் மாதேவியாரான ‘மங்கையர்க் கரசியார்” மதுரைக்கு எழுந்தருளுமாறு வேண்டிச் சம்பந்தப் பெருமானுக்கு ஒரு திருமுகம் விடுத்தனர். அவரது வேண்டு கோட் கிணங்கிப் பெருமானும் மதுரைக் கெழுந்தருளி அமைச்சர் குலச்சிறை நாயனாராலும் மங்கையர்க் கரசியாராலும் வணங்கி வரவேற்கப்பட்டு இறைவனை வழுத்தி அடியார் குழாத்துடன் அங்கே வைகினர். மங்கையர்க்கரசியார் சைவசமயந் தழுவினரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/240&oldid=1590870" இலிருந்து மீள்விக்கப்பட்டது