உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

  • மறைமலையம் - 24

யிருந்ததும், அவர் தங் கணவரான கூன்பாண்டிய மன்னரோ அப்போது சமண்மதந் தழுவினராயிருந்தார். சமண்மதம் பாண்டி நாடெங்கும் பரவியிருந்தது. சமண்முனிவர்கள் தம் மதம் புகுதாத சைவர்களை மிகவுந் துன்புறுத்தி வந்தனர். சைவ சமயாசிரியரான திருஞானசம்பந்தரும் அவருடன் பெருந்திரளான சிவனடி யார்களும் மதுரைக்கு வந்திருத்தலைக் கண்டு மனம்பொறாத சமண்முனிவர்கள் தம் பாண்டி மன்னனது உடன்பாடு பெற்றுப், பிள்ளையாரும் அடியார்களும் அமர்ந்திருந்த திருமடங்களிலே ஒரு நள்ளிரவில் தீயிட்டனர். அவர்களிட்ட தீப்பற்றித் திருமடங்கள் எரிதலைக்கண்ட பிள்ளையார், இது பாண்டிமன்னன் ஒருப்பாடு பெற்றுச் சமணர் செய்ததென உணர்ந்து,

செங்கண் வெள்விடை யாய்திரு வாலவாய் அங்கணா அஞ்ச லென்றருள் செய்யெனைக் கங்குல் ஆரமண் கையர் இடுங்கனல்

பங்கமில் தென்னன் பாண்டியற் காகவே

என இறைவனை வேண்டிப் பாட, அத் தீயானது அவிந்து, உடனே பாண்டிமன்னன் உடம்பைக் கொடிய தொரு வெப்பு நோயாய்ச் சென்று பற்றிக்கொண்டது. அக் கொடுநோய் சமண் முனிவர்களால் தீர்க்கலாகாத வாறு பெருகவே, மங்கையர்க் கரசியார் அருளுரைகேட்டு அப் பாண்டிமன்னன் திருஞான சம்பந்தப் பிள்ளையாரைக் குறையிரந்துதன்பால் வருவிக்கப், பிள்ளைாரும் அவன்பாற் சென்று அவன் இடுவித்த இருக்கையில் அவன் மருங்கே அமர்ந்தருளினார். அப்போது மங்கையர்க் கரசியாரும் பிள்ளையாரது பக்கத்தே யிருப்பச் சமண் முனிவர்கள் அவர்க்கு எதிர்ப்பக்கத்தேயிருந்து அவரைப் பலவாறு இழித்துப் பேசலாயினர்; அதுகண்டு அரசியார் உளந்துடித்து 'எம் பச்சிளந் தெய்வப் பெருமானை இவர்கள் இவ்வாறு இகழ்ந்துரைப்பதே!” என்று தங்கணவனாரை நோக்கி வருந்தி மொழிந்தனர். அதுகண்ட பிள்ளையார் அரசியார்க்கும் ஆறுதல் உண்டாம் பொருட்டு,

மானி னேர்விழி மாத ராய்வழு

திக்கு மாபெருந் தேவிகேள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/241&oldid=1590871" இலிருந்து மீள்விக்கப்பட்டது