உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 பால்நல் வாய்ஒரு பாலன் ஈங்கிவன்

என்று நீபரி வெய்திடேல்

ஆனைமாமலை யாதி யாய

இடங்க ளிற்பல அல்லல்சேர்

ஈனர் கட்கெளி யேன்அ லேன்திரு

வால வாய்அரன் நிற்கவே

233

என்னுந் திருப்பாட்டை முதலாக உடைய திருப்பதிகத் தினைத் தமது அருமைத் திருவாய்மலர்ந்தருளிப் பாண்டிமா தேவியா ருளங் குளிரவுஞ் சமண்முனிவர் வன்னெஞ்சந் திடுக்கிட்டு ஒடுங்கவுஞ் செய்திட்டார். இங்ஙனம் அருளிச் செய்த இத் திருப்பதிகச் செய்யுளிற் பிள்ளையார் தம்மைப் 'பால்பருகுதலாற் பால்மணங்கமழும் வாயினையுடைய ஒருபாலன்

என்று

குறிப்பிடுதல் மிகவுங் கருத்திற் பதிக்கற் பாலது. இது கொண்டு, திருஞானசம்பந்தப் பெருமான் மதுரைமாநகர்க்கு எழுந்தருளிய ஞான்று பால்பருகும் பருவத்தினையுடைய சிறுபிள்ளையா

""

யிருந்தனரென்பது ஐயமின்றிப் பெறப்படுகின்றதன்றோ? பால்பருகும் பிள்ளைமைப் பருவம் ஐந்தாண்டுக்கு மேற்படு தலின்மையின், மதுரையிலிருந்து பிள்ளையார் அருளிச் செய்த இத் திருப்பதிகச் செய்யுளில் தம்மைப் 'பானல்வாயொரு பாலன் என்று குறிப்பிட்டது தாம் அக்காலையில் ஐந்தாட்டைப் பருவத்தினரா யிருந்தமைபற்றியேயாம். இவர் இறைவியால் ஞானப்பால் ஊட்டப்பட்ட நாள் முதல் மதுரைக்குச் சென்றவரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சேக்கிழாரடிகள் கூறுமாறு வைத்துக் கணக்கு செய்யின், அவை தமக்கு இரண்டு ஆண்டுகளே செல்லுதல் நன்கறியப்படும். மதுரைக்குச் சென்றகாலத்திற் பிள்ளையார் தாமே தம்மைப் பால்பருகும் பாலனென்று குறித்த உரையுஞ் சேக்கிழாரது வரலாற்றுரையும் ஒத்து நிற்கின்றன. ஆகவே, பிள்ளையார் ஞானப்பாலுண்டது தமது மூன்றாம் ஆண்டிலும், மதுரைக்குச் சென்றது தமது ஐந்தாம் ஆண்டிலுமே யாமென்பதும், மதுரைக்குச் செல்லுமுன் திருப்புகலூரில் அப்பருடன் எழுந்தருளியிருந்த காலையிலும் அதற்குமுன்

திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளிய காலையிலுஞ் சிறுத்தொண்ட நாயனாரைக் கண்டு அவரொடு அளவளா வினது தமது நாலரையாண்டிலேயா மென்பதும் தாமே போதரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/242&oldid=1590872" இலிருந்து மீள்விக்கப்பட்டது