உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

235

பாண்டி மன்னர் மூவரையுஞ் சேர்த்து ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகள் விழுக்காடு வைத்துக் கணக்குச்செய்ய, அந் நால்வர்க்கும் நூற்றிருபதாண்டு களாகின்றன; இத் தொகையை ஜடிலபராந்தகனிருந்த கி.பி.770 -இற் கழிக்கக், கூன்பாண்டியன் கி.பி. 650ல் அரசு வீற்றிருந்தமை கல்வெட்டாராய்ச்சியானும் நன்கு புலனாகின்றது. மேற்குறிப்பிட்ட பாண்டியர் ஒவ்வொருவர்க்குங் குத்து மதிப்பாய்க் கணக்குச் செய்யும் முறையில் முப்பதாண்டுகள் வைக்கப்பட்டனவாயினுங், கூன்பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாறர் அம்முப்பதாண்டுகட்குமேல் ஐம்பதாண்டுகள் வரையில் அரசுவீற்றிருந்தமை புலனாகா நிற்கின்றது; என்னை? மேலே காட்டியவாற்றால் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் இப்பாண்டிமன்னனைக் கி.பி. 623, இல் வந்துகண்ட துணியப்பட்டதாகலி னென்க. கூன்பாண்டியன் திருஞான சம்பந்தப் பெருமானுக்கு இழைப்பித்த கொடுந் தீவினை யாற் கொடியதொரு வெப்புநோய் கொள்ள அந் நோயே அவனுடம்பிலிருந்த நச்சு நீரையெல்லாம் உரிஞ்சி அதனைத் தூயதாக்கவும் அதனால் அவன் நீடுவாழவுந் தமது திருவுளத் தெண்ணிப் பிள்ளையார் அவனுக்குத் திருநீறு அளித்து "வேந்தனும் ஓங்குக” எனுந் தமது அருளுரை யாற்றலால் அவன் கூனும் நிமிர்ந்து 'நெடுமாறன்' ஆகவும் அருள்புரிந்தாராகலின், இப் பாண்டிமன்னன் ஐம்பதாண்டுகள்

செலுத்தினமை வாய்வதேயாமென்க.

ல்

மை

செங்கோல்

அற்றாயினும், மேலே யெடுத்துக்காட்டிய கல்வெட் டாராய்ச்சியால் நின்றசீர் நெடுமாற பாண்டியன் கி.பி.650 ஆம் ண்டில் அரசு வீற்றிருந்தமை மட்டும் பெறப்படுகின்ற தல்லாமல் அதற்கு முன்னே அவன் கி.பி.623 ஆம் ஆண்டிலும் இருந்தானென்பது பெறப்பட வில்லையெனிற், கி.பி. 623 ஆம் ஆ ண்டிலிருந்த துடன், சிறிதேறக் குறைய கி.பி. 620 ஆம் ஆண்டளவிலேதான் அப் பாண்டிமன்னன் அரியணையேறி அரசு செலுத்தத் துவங்கினானாதல் வேண்டுமென்பதூஉ ஈண்டொருசிறிது விளக்கிக் காட்டுதும். நின்றசீர் நெடுமாறற்கு மகனான ‘கோச்சடையன்' என்னும் பாண்டி மன்னன் கி.பி.675 ஆம் ஆண்டில் அரசுவீற்றிருந்தமையுங், கி.பி. 674 ஆம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/244&oldid=1590874" இலிருந்து மீள்விக்கப்பட்டது