உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் - 24

ஆண்டின்கண் வடநாட்டிலிருந்து படையெடுத்துவந்த சாளுக்கிய வேந்தனாகிய ‘முதலாம் விக்கிரமாதித்தனை” அவன் மருதூரிலும் மங்கலபுரத்திலும் எதிர்ந்து தோல்வி பெறச் செய்தமையும், அவ்வாறு அவன் அச் சாளுக்கிய மன்னனை எதிர்ந்துநின்றுழித் தொண்டைநாட்டரசனான ‘முதலாம் பரமேசுரவர்மனும் அவன்றன் மகன் 'இரண்டாம் ராஜசிம்மனும்’ அவற்குத் துணையாய் நின்று அவ் விக்கிர மாதித்தனொடு பொருது அவனைத் தமிழகத் தினின்று துரத்திவிட்டமையும் 'வேள்விக்குடி', 'கேந்தூர்' என்னும் இடங்களில் அகப்பட்ட பட்டையங்களைக்

L

8

6

காண்டு

வரலாற்று நூலாசிரியர்களால் நன்காராய்ந்து காட்டப் பட்டிருக்கின்றன. இனிக், 'கோச்சடையன்’ நின்றசீர் நெடுமாற பாண்டியற்கு மகனாதல் போலவே, 'முதலாம் பரமேசுரவர்மனும் வாதாவிகொண்ட முதலாம் நரசிம்மவர்மன் ஆகிய முதலாம் ராஜசிம்மனுக்கு மகன் ஆவன். இந்நரசிம்மவர்மன் மகளைக் கோச்சடையன் மணந்து கொண்டமையால், அவள் வயிற்றிற் பிறந்த தன் மகனுக்கு அவன்றன் பாட்டனின் சிறப்புப்பெயரான 'ராஜசிம்மன்’ என்பதனை இயற்பெயராகச் சூட்டினான். அங்ஙனமே, முதலாம் பரமேசுரவர்மனுந் தன்மனையாள் வயிற்றிற் பிறந்த தன் மகனுக்கும் அவன்றன் பாட்டன் சிறப்புப்பெயராய 'ராஜசிம்மன்' என்பதனை இயற்பெயராகச் சூட்டினான். இவ்வாற்றாற், கோச்சடை யன் என்னும் பாண்டிமன்னனும், முதலாம் பரமேசுரவர்ம பல்லவ வேந்தனும் நெருங்கிய மைத்துனக்கிழமை யுடையராதலும், அதுபற்றியே அவ்விருவரும் ஒருங்குசேர்ந்து வடக்கிருந்துவந்த பகை மன்னனான சாளுக்கிய விக்கிரமாதித்தனை எதிர்ந்து வென்று துரத்தினாராதலும் வரலாற்று நூலாரால் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, கி.பி.676 ஆம் ஆண்டில் ச் செந்தமிழ் நாட்டின் தென்பகுதிக்கண் அரசுபுரிந்த பாண்டி மன்னனும், வடபகுதிக்கண் அரசுபுரிந்த பல்லவ அரசனும் நெருங்கிய சுற்றத்தொடர்புடையராய் ஒருவரோ டொருவர் அன்பினால் அளவளாவி நின்றனரென்பதும், அவ்விருவர்க்கும் அஞ்ஞான்று பகைவனாய் அவரொடு முரணி நின்றோன் வடநாட்டுச் சாளுக்கிய மன்னனான முதலாம் விக்கிரமாதித் தனேயாவ னென்பதும் நன்கு பெறப்படுதல் காண்க.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/245&oldid=1590875" இலிருந்து மீள்விக்கப்பட்டது