உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -3

237

இனிக், கி.பி.674 ஆம் ஆண்டுக்குமுன் தென்றமிழ் நாட்டில் அரசுவைகிய ‘நின்றசீர் நெடுமாற பாண்டியன்' தன்மகன் கோச்சடையனுக்கு, வாதாவி கொண்ட நரசிம்மவர்ம பல்லவன் மகளை மணஞ்செய்து கொண்டமை மேற்காட்டியவாற்றால் நன்குவிளக்குதலின், நெடுமாறனும் நரசிம்மவர்ம பல்லவனுந் தம்முள் நட்புரிமை வாய்ந்தனரா யிருந்தமையுந் தானேபெறப் படும். இதுகொண்டு, நெடுமாறன் நெல்வேலிப் போர்க்களத்தில் வென்று துரத்தினது நரசிம்ம வர்ம பல்லவனை அன்றென் பதூஉம், அங்ஙனம் அவனாற் போர்முனையில் தொலை வுண்டோன் தமிழ்நாட்டு வடவெல்லைக்குப் புறம்பான வடபுல வாதாவியில் அரசு புரிந்த சாளுக்கியமன்ன னொருவனே யாவனென்பதூஉஞ் செவ்வனே முடிக்கப்படும்.

இனி, நெடுமாறன்மேற் படையெடுத்துவந்த சாளுக்கிய மன்னன் யாவனென்பது ஆராயற்பாற்று. நெடுமாறற்கு மகனான 'கோச்சடையன்” மேற் போர்க்கெழுந்து வந்து தோல்வியுற்றோன் முதலாம் விக்கிரமாதித்தன் என்னுஞ் சாளுக்கிய வடபுல மன்னனேயாதலும், அங்ஙனம் அவ்விருவர்க் குள்ளும் மூண்டபோர் கிபி. 674 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாலுந் துணியப்பட்டுக் கிடத்தலின் கோச்சடையன் அரியணையேறி அரசு வீற்றிருக்கத் துவங்கியதும், அவன் றந்தையாகிய நின்றசீர் நெடுமாறன் இறைவன்றிருவடி நீழலெய்தியதுஞ் சிறிதேறக் குறையக் கி.பி. 670 ஆம் ஆண்டில் நிகழ்ந்தனவாகல் வேண்டும். கோச்சடையன்மேற் படையெடுத்து வந்த முதலாம் விக்கிரமாதித்த சாளுக்கிய மன்னனோ, கி.பி. 642 ஆம் ஆண்டில் நரசிம்மவர்ம பல்லவவேந்தற்குப் படைத்தலைவராய்ப் படையெடுத்துப் போந்த சிறுத்தொண்ட நாயனாரொடு பொருது அப்போரில் இறந்துபட்ட ரண்டாம் புலிகேச மன்னற்கு மகனாவன். இங்ஙனமாகக், கோச்சடையனை வந்தெதிர்த்தவன் முதலாம் விக்கிரமாதித்தனென்பது தெளியப் படவே, கோச்சடையற்குத் தந்தையான நின்றசீர் நெடுமாறனை வந்தெதிர்த்த சாளுக்கிய வேந்தன் விக்கிரமாதித்தனுக்குத் தந்தையான இரண்டாம் புலிகேசனே யாவனென்பது ஒருதலை. புலிகேச மன்னன்றன் போர்த்திறத்தினையும் அவன் படையெடுத்துச் சென்ற நாடுகளையும் விரித் துரைக்கும் ஒரு செப்புப் பட்டையமானது கி.பி. 634 ஆம் ஆண்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/246&oldid=1590876" இலிருந்து மீள்விக்கப்பட்டது