உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் - 24

வெட்டப்பட்டதாகும்.

ஊர்கள் உரியவா

10 வடக்கே வடுகுநாட்டின் கண் எல்லூருக்குங் குண்டூருக்கும் இடையிலிருந்த அத்தனையும் முதலாம் மகேந்திரவர்மனுக்கு யிருந்தன; தன் நாட்டுக்கு அருகிருந்த அவ்வூர்களை இரண்டாம் புலிகேசன் நடுவுநிலையிகந்து கி.பி. 910 ஆம் ஆண்டிற் கவர்ந்துகொண்டான். அதுமுதல் தமிழ்நாட்டின் வ வ

முற்றுகை

பகுதியி

லிருந்த பல்லவ அரசர்க்குந், தமிழ்நாட்டின் வடவெல்லைக்கு அப்பாலிருந்த சாளுக்கிய மன்னர்க்குந் தீராப் பகை உண்டாவதாயிற்று." புலிகேசன் அவ்வாறு மகேந்திரவர்ம பல்லவற்குரிய வடுக நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டபிற், சில ஆண்டுகள் கழித்துத், தமிழ்நாட்டின் மேற் படையெடுத்து வந்து, பல்லவ வேந்தர்க்குத் தலைநகரான திருக்கச்சியை (காஞ்சிபுரத்தை) செய்தான்.அக்காலம் மகேந்திரவர்ம பல்லவன்றன் மகனான முதலாம் நரசிம்மவர்ம பல்லவனது ஆட்சி துவங்கியகாலமா யிருத்தல் வேண்டும்; ஏனென்றால், அங்ஙனம் வந்தெதிர்த்த புலிகேச மன்னனைத் துரத்த மாட்டாமல் நரசிம்மவர்மன் பின்னடைந்தானென 'ஐகோ’லில் அகப்பட்ட கல்வெட்டானது நுவலாநிற்கின்றது. இந் நரசிம்மவர்மன் அரசாளத் துவங்கிய காலம், இவன்றந்தை 'மகேந்திரவர்ம பல்லவன்' இறைவன்றிருவடி யெய்திய கி.பி.625 ஆம் ஆண்டே யாகையாற், புலிகேசன் இவன்மேற் படை யெடுத்துவந்து இவனது தலைநகராகிய திருக்கச்சியைச் சூழ்ந்து காண்ட து இவன்றன் ஆட்சி துவங்கி ஐந்தாண்டுகள் சன்றபின் அஃதாவது கி.பி. 630 ஆம் ஆண்டில் நேர்ந்ததாயிருத்தல் வேண்டும்.!2 அற்றன்று, மகேந்திரவர்மனது ஆட்சியின் இறுதிக்காலத்திலேயே புலிகேசன் காஞ்சி நகர்மேற் படையெடுத்து வந்தானெனிற் படும் இழுக் கென்னை யெனின்; அக்காலையில் நருமதை யாற்றங்கரைக்கு வடக்கிலும் மயமலைக்குத் தெற்கிலும் உள்ள வடநாடு முழுமைக்கும் ஒரு தனிவேந்தனாய்க் கன்னோசிநகரில் அரசு செலுத்திய ‘ஹர்ஷன்” என்பான், நருமதை யாற்றங்கரைக்குத் தெற்கேயுள்ள சாளுக்கிய நாட்டையுங் கைப்பற்றுதற் பொருட்டுப்,புலிகேசன் அவனைத்தடைசெய்து அவன் தனது நாட்டின்மேல் வராதபடி அவனுடைய யானைப் படை களைக் கொன்று அவனைப் பின்னிடையச் செய்தனன். இவ்வாறு கி.பி. 620 ஆம் ஆண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/247&oldid=1590877" இலிருந்து மீள்விக்கப்பட்டது