உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

3

239

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதற் பல ஆண்டுகள் வரையிற் புலிகேசன் தனது நாட்டின்மேல் 'ஹர்ஷன் வராமல் அவனைத் தடைசெய்து அதனைப் பாதுகாக்கும் முயற்சியில் நின்றமையால், அவன் மகேந்திர வர்மனது ஆட்சியின் இறுதிக்காலமாகிய அப்போது கச்சி நகர் மேற் படை திரட்டி வருதல் சிறிதும் இயலாது. பேராண்மை மிக்க ஹர்ஷவேந்தன் தனது நாட்டினுட் புகாவாறு அதன் வடவெல்லையில் தன் காவற்படைகளை நிறுத்தி அதனைப் பாதுகாக்கும் முயற்சியில் சிறிதேறக் குறையப் பத்தாண்டுகள் வரையிற் புலிகேசன் உறைத்து நின்றமை ஆராய்ச்சியாற் புலனாகின்றது. ஏனெனில், ஹர்ஷவேந்தன் நருமதை யாற்றங்கரைக்குத் தெற்கே வரும் முயற்சியைக் கைவிட்டு மேல்கரைக்கண் உள்ள 'வலபை நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லும் முயற்சியைக் கி.பி. 630 ஆம் ஆண்டிற்குச் சிறிது முன்னே துவங்கி, அதன்பிற் சிறிது காலத்தி லெல்லாம் அந்நாட்டின்மேற் சென்றனன்.3 அவ்வாறு அவன் வலபை நாட்டின்மேற் செல்லும் முயற்சியிற் றன்கருத்தைச் செலுத்தினமை திண்ணமாய்த் தெரிந்தபிறகுதான், புலிகேசனுந் தமிழ்நாடு நோக்கிப் படைமேற்கொண்டு பெயர்ந்தானாகல் வேண்டும். இங்ஙனமாகப் புலிகேசன் கி.பி. 629 ஆம் ஆண்டிற்குப் பின்னர்த்தான் காஞ்சிநகர்மேற் படையெடுத்து வந்தானென்பதுஉண்மைச் சான்றுகளால் நாட்டப்படுத லானும், கி.பி.625 ஆம் ஆண்டொடு மகேந்திரவர்ம பல்லவனது ஆட்சி முடிவுபெற்று அவன் மகன் நரசிம்மவர்ம பல்லவனது சி துவங்குதலானும், அவன் மகேந்திரவர்மனது ஆட்சியின் இறுதிக்காலத்தே படையெழுந்து வந்தானென்றல் ஒருவாற்றானும் பொருந் தாதெனவிடுக்க. மற்று, அஃது அவன் மகன் நரசிம்மவர்ம பல்லவனது ஆட்சியின் றொடக்க காலத்திலே தான் நிகழ லாயிற்றென்பது திண்ணம். பல ஆண்டுகளாகப் போராண்மையிற் பெரிதும் பழகி, ஹர்ஷவேந்தனையும் போரிற் பின்னிடையச் செய்து போர்த் தொழிலிற் றேர்ச்சிபெற்ற பெரும்படை யோடு சடுதியில் தன்மேற் போர்கெழுந்து வந்த புலிகேசனை, அப்போதுதான் அரசியற்பொறை தாங்கிய இளைஞனான நரசிம்மவர்ம பல்லவன் எதிர்ந்து வெல்லமாட்டாது பின்னிடைந்தது வாய்வதேயாம்.

சி

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/248&oldid=1590878" இலிருந்து மீள்விக்கப்பட்டது